Published:Updated:

இன்று கலாம்... நாளை நாம்!

ம.கா.செந்தில்குமார்

இன்று கலாம்... நாளை நாம்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''படம் ரிலீஸ் ஆன பிறகு நீங்களே  'அஷோகன் உங்க இன்டர்வியூ வேணும்’னு கேக்குற அளவுக்குப் படம் இருக்கும். நான், நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாருமே புதுமுகங்கள். நானே சொந்தமா தயாரிக் கிறேன். எல்லாம் கதை மேல உள்ள நம்பிக்கை!'' - அவ்வளவு நம்பிக்கையாகப் பேசுகிறார் 'கம்பன் கழகம்’ படத்தின் அறிமுக இயக்குநர் அஷோகன். 'எங்கேயும் எப்போதும்’ சரவணனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பட்டறையில் இருந்து வெளி வந்திருக்கும் அடுத்த மாணவர்.

 ''முதல் படமே சொந்தத் தயாரிப்புன்னா... பெரிய ரிஸ்க் ஆச்சே..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆனா, எனக்கு அது வசதியாத் தெரியுது. கதையை ரெடி பண்ணி நிறையப் பேர்கிட்ட சொன்னேன். 'நல்லா இருக்கு’னு பாராட்டுறதோடு நிறுத்திக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர்கிட்ட சொல்லிப் புரியவைக்கிற கஷ்டத்துக்கு நாமளே தயாரிச்சிரலாம்னு தோணுச்சு. வீட்டுல கொஞ்சம் பணம், நிலம் இருந்துச்சு. அம்மாகிட்ட சொன் னேன். 'உனக்காகத் தான் சேர்த்துவெச்சி ருந்தோம். எடுத்துக் கோ’னு உடனே சம்மதம் சொன்னாங்க. அவங்க நம்பிக்கையைக் காப்பாத்த ணும்னு பயம் வந்திருச்சு. அதனாலதான் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண மட்டும் ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டேன்!''

இன்று கலாம்... நாளை நாம்!

''அப்படி என்ன வெச்சிருக்கீங்க கதையில்?''

இன்று கலாம்... நாளை நாம்!

''இங்க புதுக் கதை, பழைய கதைனு எதுவுமே கிடையாது. ட்ரீட்மென்ட் புதுசா இருந்தா, படத்துக்கு கை கால் முளைச்சு தன்னால ஓடிடும். 'எங்கேயும் எப்போதும்’ சரவணன் என் நண்பன்தான். ஒன்பது வருஷ ரூம்மேட். அவனோட வெற்றி எங்களுக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கு. அஞ்சு இளைஞர்கள்தான் கதாநாயகர்கள். படிப்பை முடிச்சிட்டு நேரத்தோட அருமை புரியாம, வெட்டுக் குத்துனு ஊர் சுத்திட்டு இருக்காங்க. தற்செயலா பள்ளி மாணவன் ஒருத்தனைச் சந்திக்கிறாங்க. 'வாழ்க்கைன்னா என்ன’ன்னு அவன்கிட்ட இருந்து கத்துக்கிறாங்க. அவங்க என்ன கத்துக்கிட்டாங்க... அதான் கம்பன் கழகம்!''

''முருகதாஸ்கிட்ட உதவியாளரா இருந்து வர்ற எல்லாரும் சமூக சிந்தனையோடுதான் கதை சொல்வீங்களா?''

''அப்படியும் இருக்கலாம். 'இப்படி இருக்காதீங்க.. இப்படி இருங்க’னு சொல்றது நல்ல விஷயம்தானே? சட்டையை இழுத்துப் பிடிச்சு கருத்து சொல்லாம, போற போக்குல கருத்தை பாக்கெட்ல

இன்று கலாம்... நாளை நாம்!

சொருகியிருக்கோம். படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் பக்கத்து வீட்டு ஆள் மாதிரியே இருப்பாங்க. படத்துல நடிக்கிற பிரபு, நவீன், முரளி, ராய்சன், டேவிட் அஞ்சு பேரும் உண்மையிலேயே நண்பர்கள்!

அன்புச்செல்வன் ஐ.ஏ. எஸ்ஸா நடிச்ச 'பசங்க’ கிஷோர் கேரக்டர்தான் படத்தோட பிரேக்கிங் பாயின்ட். 'இன்னைக்கு இது நடக்கும்னு ஏன் நேத்தே கனவு காணலை?’னு கேட்கிற குட்டி ஜீனியஸ். 'இன்னைக்கு எனக்கு கலாம் ரோல் மாடல்னா, நாளைக்கு நான்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’னு நம்பிக்கையை விதைக்கிறவன். சொல்லும்போது வயசுக்கு மீறிய பேச்சு மாதிரி தோணுதா? ஆனா, படம் பார்க்கும்போது பளிச்னு இருக்கும்!''