Published:Updated:

பிஜிலி வெடி... ரூ.15 லட்சம் போனஸ்... `மீம்வளத் துறை' மினிஸ்டர்... இது செலிபிரிட்டி தீபாவளி! #Satire

பிஜிலி வெடி... ரூ.15 லட்சம் போனஸ்... `மீம்வளத் துறை' மினிஸ்டர்... இது செலிபிரிட்டி தீபாவளி! #Satire
பிஜிலி வெடி... ரூ.15 லட்சம் போனஸ்... `மீம்வளத் துறை' மினிஸ்டர்... இது செலிபிரிட்டி தீபாவளி! #Satire

தீபாவளி ஃபீவர் பட்டையகிளப்பிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்துல, கிரெடிட் கார்டு தேயத் தேய ட்ரெண்டிங்கா புது டிரஸ், பட்டாசுன்னு ஷாப்பிங் முடிச்சுட்டு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு ஒருத்தர விடாம பிடிச்சுவெச்சு தீபாவளி `விஷ்'கள அள்ளித் தெளிச்சிட்டிருப்போம் ஒரு சின்ன சேஞ்சுக்கு சோஷியல் மீடியாஸ்ல அதகளம் பண்ணிட்டிருக்கிற நம்ம மீம் டெம்ப்லேட் மன்னர்கள்... அதாங்க, நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாரும் தீபாவளி வாழ்த்து சொல்லி, பட்டாசுக் கொளுத்திக் கொண்டாடினா எப்படி இருக்கும்னு ரிசர்ச் பண்ணி, சுடச்சுட கொண்டு வந்திருக்கோம்! மிஸ் பண்ணாம வெ(ப)டிங்க பாஸ்!

மோடிஜி: பளபளன்னு `டிப்-டாப்'பா சொக்கா போட்டுக்கிட்டு, எப்போ... எப்படி வெடிக்கும்னே தெரியாத வெடியெல்லாம் ஒரே நேரத்துல சும்மா அசால்ட்டா வெடிக்கிறதுதான் இவர் இஸ்டைலு! ``இதென்ன பிரமாதம்... இன்னும் ஸ்பெஷல் அயிட்டம்லாம் இருக்கு''னு நம்ம வைகைப்புயல் பாணியில அம்பானியில ஆரம்பிச்சு ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வரைக்கும் தீபாவளி போனஸா களத்துல இறக்கிவிட்டு வேடிக்கைபார்க்கும் ஏழைத்தாயின் மகன். அவ்வ்வ்வ்... அந்த 15 லட்சம் ரூபாய் போனஸ்ஸு..? (ஜி... டீ இன்னும் வரல..!)

ஹெச்.ராஜா: வருஷம் பூரா ரகம் ரகமா படம் காட்டினாலும், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுற `சர்கார்' படத்துக்கு ஹெவி டஃப் கொடுக்கும்படியாக `நான் அவன் இல்லை' பார்ட்-3 படத்தை வெளியிட்டு, ரசிகர்களின் ஏகபோக லைக்குகளை அள்ளிக்கிட்டு இருக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா! வேற யாரு? - நம்ம ஹெச்.ராஜாவேதான்!

தீபாவளிக்கு முதல் நாள்

இவரோட அட்மின் தீபாவளி வாழ்த்து சொல்ல, இவர் அடுத்த நாளே வந்து `நான் இல்லை'னு பல்டி அடிக்க, தீபாவளி மொத்தமும் எல்லா சிறப்பு நிகழ்ச்சிகள்லயும் இவர்தான் சூப்பர் டூப்பர் ஹிட்!

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்: சுனாமியே வந்தாலும் ஸ்விம்மிங்க போட்டுட்டு `புஸ்'வாணம் வெடிச்சு ஊரையே மிரட்டிவருகிறது, இந்த ஃபிடல் கேஸ்ட்ரோ - சே குவேரா கூட்டணி. நமுத்துபோன வெடியெல்லாம் வெடிக்காதுன்னு தெரிஞ்சும், வெடிக்கப் போற மாதிரியே பில்டப் காட்டிவரும் இவர்களின் மனதைரியத்தைப் பாராட்டி வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்! (போன் ஒயர் பிஞ்சு ரெண்டு வருஷமாச்சுங்கோ..!)

டி.ஜெயக்குமார்: மியூசிக் கான்சர்ட், ஆடியோ ரிலீஸ்னு `வேற-லெவல்' பர்ஃபாமென்ஸ் பண்ணி ரசிகர்களுக்கெல்லாம் ஜிலேபி, ஜாங்கிரினு தீபாவளிப் பலகாரம் கொடுத்து `ஸ்வீட் எடு - கொண்டாடு' மோடில் உற்சாகமாகியிருக்கிறார் `மீம்வளத் துறை' ஜெயக்குமார். `இந்தத்

தீபாவளிக்கு ஒரே பேட்டிதான்! மொத்த சோஷியல் மீடியாவும் க்ளோஸ்'ங்கிற ரேஞ்சுக்கு `ஹவுஸ்ஃபுல்' போர்டு வெச்சு அட்ராசிட்டி பண்ணிட்டார்ன்னா பார்த்துக்கோங்களேன்!

மு.க.ஸ்டாலின்: தீபாவளி முழுக்க ஓவர் பிஸியா ஓடிட்டு இருந்தாலும், இவரு தீபாவளிய கொண்டாடுறாரோ இல்லையோ... முதல் வேலையா அவரோட உடன்பிறப்புகள் எல்லோரையும் கூப்பிட்டு ஓவர்நைட்ல பிரியாணி பார்சல் கொடுத்து தீபாவளியைக் கொண்டாடச் சொல்லி அனுப்பிட்டாராம். (தட் ஹப்பாடா மொமென்ட்!)

டி.டி.வி.தினகரன்: தீபாவளிக்கு வெச்சிருந்த 18 அணுகுண்டும் குற்றாலத் தண்ணியிலேயே `நாக் அவுட்' ஆகிபோனதுனால `வடை போச்சே!' எஃபெக்ட் காட்டிக்கிட்டு இருந்த டி.டி.விக்கு `அடடே! அதான் 20 ரூபாய் டோக்கன் இருக்கே'னு அவரது ஏழாம் அறிவு அலாரம்வெச்சு அடுத்த பாயசத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்காம். (சோனமுத்தா போச்சா?)

ரஜினிகாந்த்: எப்போவுமே பி.ஜே.பி... ஸாரி, பிஜிலி வெடிதான் இவரு சாய்ஸ்! இவரும் இன்னிக்கு வெடிப்பாரு, நாளைக்கு வெடிப்பாருன்னு அலப்பறைகள் காட்டி, அடுத்த தீபாவளியே வந்துடும்போல. (வெடிச்ச மாதிரியும் இருக்கணும், வெடிக்காத மாதிரியும் இருக்கணும்... அதானே பாஸ்?!)