Published:Updated:

எனக்கு இங்கே எதிரிகள் அதிகம்!

நா.கதிர்வேலன்படங்கள் : பொன்.காசிராஜன்

எனக்கு இங்கே எதிரிகள் அதிகம்!

நா.கதிர்வேலன்படங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

பின்னி மில்லில் எதிரிகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக்கொண்டு இருந்தார் சிம்பு. தூசி பறக்க அவர் வந்து அமர்ந்ததும் ஆவி பறக்கப் பின்னாலேயே வருகிறது சூடான டீ!

 '' 'வேட்டை மன்னன்’... தலைப்பே கதை சொல்லுதா? டிரெய்ன் ஃபுட்போர்டுல நின்னு போயிருக்கீங்களா... தடதட திகுதிகுனு இருக்கும். அப்படித்தான் இருக்கும் படத்தோட ஒவ்வொரு ஃப்ரேமும்!'' - கன்னத்தில் குழி விழ அழகாகச் சிரிக்கிறார் ஹேண்ட்ஸம் சிம்பு!    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'வானம்’ படங்களில் உங்களை ரொம்ப ரசிச்சோம். இப்ப திரும்ப 'ஒஸ்தி’, 'வேட்டை மன்னன்’னு பழைய பாதைக்குத் திரும்பிட்டீங்களே..?''

''அந்த ரெண்டு படங்களையும் அது வரை சிக்காத எலைட் ரசிகர்களைப் பிடிகிறதுக்காகப் பண்ணினேன். தவிர, ஒரு நடிகன் எப்பவும் ஒரே மாதிரி படம் பண்ணக் கூடாது. 'இவன் இப்படித்தான்’னு

எனக்கு இங்கே எதிரிகள் அதிகம்!

பிராண்ட் குத்தி, சிம்பிளா ஒதுக்கிவெச்சிருவாங்க. 'விண்ணைத் தாண்டி வருவாயா’ நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டுவந்தது. அதுக்காக அதே மாதிரி பண்ணிட்டு இருந்தா, போரடிச்சிடும். 'வானம்’ படத்தில் எனக்குப் பெரிய ஸ்கோப் கிடையாது. அந்த ஸ்க்ரிப்ட் பிடிச்சதால் சம்மதிச் சேன். 'தபாங்’ இந்தியில் காட்டுகாட்டுனு காட்டின படம். சல்மான் பின்னியிருப்பார். அதைச் செஞ்சு பார்க்க ஆசைப்பட்டு 'ஒஸ்தி’ பண்ணேன். மாஸ் படத்தில் கிடைக்கும் மரியாதையே தனி. ஹீரோன்னா, கண்டிப்பா மாஸ் படம் பண்ணணும்!''

''ஆனா, மாஸ் மசாலாவில் பிச்சு உதறின விஜய்யே ஹீரோயிசத்தை விட்டுட்டு, 'நண்பன்’னு ரெண்டு ஹீரோக்களோடு சேர்ந்து நடிச்சுட்டு இருக்காரே..?''

''அவர் அங்கே போயிட்டார். நான் இங்கே வந்துட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா நடிப்பாங்க. நான் அதை மீறணும்னு ஆசைப்படுறேன். சிம்புன்னா எல்லாம் பண்ண ணும். அடுத்தது 'போடா போடி’, 'வட சென்னை’னு வேற வேற கலர். 'சிம்பு ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரைவெச்சு விளையாடலாம்’னு இயக்குநர்கள் சொல்லணும். அதுதான் என் ஆசை!''

''நீங்கதான் இப்படிச் சொல்றீங்க. ஆனா, உங்களை வெச்சுப் படம் இயக்கிய சில இயக்குநர்கள் இப்ப உங்களைத் திட்டிட்டு இருக்காங்களே?''

''அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. சிம்புவுக்கு நடனம், கதை நாலெட்ஜ், இயக்கம் தெரியாதுனு சொன்னா, சின்னப் புள்ளைகூடச் சிரிக்கும். இன்னும் 10 டைரக்டர் கள் என்னைத் திட்டிப் பேட்டி கொடுத்தாலும், எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்கு சினிமாதான் லைஃப். அதுதான் என் சந்தோஷம். 'சினிமாவுக்கு வரலேன்னா, சிங்கப்பூரில் இன்ஜினீயர் ஆகி இருப்பேன்... அமெரிக்கா வில் டாக்டராகி இருப்பேன்’னு பொய் சொல்ல விரும்பலை. சினிமாவில் எல்லா ருக்கும் நண்பர்களைவிட எதிரிகள்தான் அதிகம். எனக்கு அது இன்னும் அதிகம்!''

எனக்கு இங்கே எதிரிகள் அதிகம்!

'' 'வேட்டை மன்னன்’ படத்தில் 'நான்தான் ஹீரோயின்’னு தீக்ஷா சேத் சொல்றாங்க. 'இல்லை... நான்தான்’னு ஹன்சிகா சொல்றாங்க. என்னங்க நடக்குது?''

''நம்ம சைடுல இருந்து அந்த மாதிரி நியூஸ் வர்றது ஒண்ணும் புதுசு இல்லையே? அப்படி வராமல் இருந்தாத்தான் தப்பு. நான் ரெண்டு பேருக்கும்தான் கதை சொன்னேன். ஹன்சிகா, தீக்ஷா ரெண்டு பேருமே படத்துல இருக்காங்க. கதைக்கு இன்னொரு ஹீரோயினும் தேவைப்படுறாங்க. என்ன நடக்குதுனு பார்க்கலாம். ஒவ்வொரு ஹீரோயினும் தன் கேரக்டருக்குத்தான் ஸ்கோப் இருக்கணும்னு எதிர்பார்க்கிறது இயற்கைதானே?''

''எங்கே பார்த்தாலும் தனுஷின் 'வொய் திஸ் கொல வெறி’தான். நெட்ல ஹிட்ஸ் கோடியைத் தாண்டிருச்சு. நீங்க என்ன சொல்றீங்க?''

''ஏன் எப்பவுமே தனுஷ்பத்தி என்கிட்டயே கேட்கிறீங்க. தமிங்கிலீஷ் பாட்டு கலாசாரத்தை 'லூஸுப் பெண்ணே’ பாடி நான்தான் ஆரம்பிச்சுவெச்சேன். இப்போ எல்லோரும் அதை ஃபாலோ பண்றாங்க. '

எனக்கு இங்கே எதிரிகள் அதிகம்!

கொல வெறி’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுல ரைட்டு, ராங்கு, பெண்களைக் கிண்டல் பண்றாங்க, திட்டுறாங்கன்னுலாம் பார்க்கக் கூடாது. கேட்க நல்லா இருக்கா... அவ்வளவுதான்! எல்லாத்துலயும் குத்தம் கண்டுபிடிச்சுட்டே இருந்தா, கிரியேட்டிவிட்டி வளராது!''

''இந்த வருஷம் வெளியான படங்களில் எது எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருந்தது?''

''எனக்கு 'காஞ்சனா’ பிடிச்சிருந்தது. பேய்ப் படத்துல காமெடியை அழகா வொர்க்-அவுட் பண்ணியிருந்தாங்க. தல நடிச்ச 'மங்காத்தா’ சூப்பர். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க உண்மையிலேயே தைரியம் வேணும். 'வேலாயுதம்’ விஜய் அவர் ஸ்டைல்ல பின்னியிருந்தார். '7ஆம் அறிவு’ போதிதர்மன், டி.என்.ஏனு வித்தியாசமாப் போச்சு. என்ன இருந்தாலும்... இந்த வருஷம் 'தல’தாங்க ஹிட்!''