Published:Updated:

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

காத்திரு என்றார் சைந்தவி!

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

காத்திரு என்றார் சைந்தவி!

Published:Updated:
##~##
''நா
ன் எப்பவும் மீடியாவுக்கு நெருக்கமானவன் இல்லை. ஆனாலும், விகடன் டாப் 10 மனிதர்களில் எனக்கும் ஓர் இடம். 2011 எனக்கு அபாரமா ஆரம்பிச்சுஇருக்கு!''- ஜி.வி.பிரகாஷ் குமாரின் குரலிலும் கண்களிலும் கனிவு! தமிழின் 'இனிமை இளமை’ இசையமைப்பாளர். ''எல்லாம் பேசணும்... 'எல்லாம்’னா எல்லாம்!'' என்ற தும் குறிப்பு உணர்ந்து வருங்காலக் காதல் மனைவி சைந்தவியையும் அருகில் அமர்த்திக் கொள்கிறார் ஜி.வி.

''சைந்தவியோடு காதல், கல்யாணம்... பின்னணி சொல்லுங்க?''

''சைந்தவி எனக்கு 9 வருஷப் பழக்கம். எட்டு வருஷம் முன்னாடியே நான் என் காதலை அவங்ககிட்ட சொல்லிட்டேன்! அவங்க எனக்கு ஸ்கூல்ல ஜூனியர். ஸ்வீட் ஹார்ட் பொண்ணு. ரொம்ப நல்லவங்க. அருமையானவங்க. அவங்களைக் கல்யாணம் செய்துக்கிறது எனக்குத்தான் பெருமை. நான்தான் முதலில் அவங்ககிட்ட என் காதலைச் சொன்னேன். இங்கேதான் பெண்கள் முதல் ஸ்டெப் எடுக்கவே மாட்டாங்களே. அதனால் நானே எடுத்து, 'ஐ லவ் யூ’ சொன்னேன். என்னை அவங் களுக்கு நிச்சயம்

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

பிடிக்கும்கிங்ற நம்பிக்கை யில்தான் சொன்னேன். ஆனா, இரண்டு நாள் அவங்ககிட்ட இருந்து எந்தப் பதிலும் இல்லை. நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கிட்டோமோனு தவிப்புல இருந்தப்ப, 'ஓ.கே... காத்திருந்தது போதும்... லெட்ஸ் லவ்’னு ரொம்ப கூலா பதில் சொன்னாங்க... என் இனிய ராட்சசி! பின்னாடி, 'ஏன் நாம உடனே பதில் சொல்லலை’ன்னு அவங்களே ஃபீல் பண்ணாங்களாம். என் முதல் படத்தில் இருந்து என் இசைக்கு முதல் ரசிகையும் க்ரிட்டிக்கும் சைந்தவிதான். 'உருகுதே மருகுதே’, 'பூக்கள் பூக்கும் தருணம்’, 'யாத்தே யாத்தே’னு அவங்க ரசிச்ச எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்!''

''சினிமாவில் ஒரு நிலையான இடம் பிடிச்ச பிறகுதான் காதல் விஷயத்தை அறிவிக்கணும்னு எதுவும் சபதமா?''

''அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா, மத்தவங்களுக்குச் சாதாரணமா கிடைச்சது எனக்கு ரொம்ப சிரமத்துக்குப் பிறகுதான் கிடைச்சிருக்கு. நிறையப் போராட்டம். 23 படங்கள் முடிச்சுட்டேன். மூணு வருஷத்துல இது மதிக்கத்தக்க இடம்தான். அதைத் தொடர்ந்து தக்கவைக்கிறதில் இருக்கு என் சாமர்த்தியம். ரெகுலர் கமர்ஷியல் பண்றதோ, குத்துப்பாட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆறதோ என் வழக்கம் கிடையாது. 'வெயிலோடு விளையாடி’, 'உருகுதே மருகுதே’, 'தாய் தின்ற மண்ணே’, 'பூக்கள் பூக்கும் தருணம்’போல கிளாஸிக்கல் ஹிட்ஸ் கொடுக்கணும். நேத்து சுதா ரகுநாதனும், உன்னிகிருஷ்ணனும் 'பூக்கள் பூக்கும் தருணம்’ பத்தி அரை மணி நேரம் பேசினாங்க. அப்படி கிளாஸிக்கல் பாடகர்களே சிலிர்க்கிற அனுபவம் தரணும்.

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் தாய்மாமனா அமைஞ்சது பல வகையில் வரம். சில வகையில் பலவீனம். ரஹ்மான் சாரிடம் சேர்வதற்கு முன்னாடி ஹாரிஸ், பரத்வாஜ், தினா, வித்யாசாகர் இப்படி எல்லோரிடமும் வேலை செய்துஇருக்கேன். எனக்கு 1, 2, 3 மாதிரி நம்பர் ஆசை கிடையவே கிடையாது. 25 வருஷம் கழிச்சு ஜி.வி.பிரகாஷோட 100 பாடல்களாவது காலத்தைக் கடந்து நிக்கணும். 'காலங்களில் அவள் வசந்தம்’, 'நிலவே என்னிடம் நெருங்காதே’, 'கண்ணே கலைமானே’ மாதிரி உயிரோடு சேர்ந்து உருகணும். அப்படி வேலை பார்த்தால் எனக்குப் போதும். அனுராக் காஷ்யப் படம் மூலம் பாலிவுட்டுக்குப் போறேன். இன்னும் சினிமாவில் நான் நிலையான இடத்தைப் பிடிச்சுட்டதா நினைக்கலை சார்!''

''நீங்க எந்த இடத்துக்கும் ஆசைப்படலைன்னு சொல்றீங்க. ஹாரிஸ், யுவன், ஜி.வி.பிரகாஷ் இவங்ககிட்ட போட்டி இருக்கு என்பது உண்மைதானே?''

''எங்க மூணு பேருக்குள்ள கடுமையான போட்டி இருப்பது உண்மைதான். ஆனா, நான் ஹாரிஸ் ஜெயராஜைத்தான் என் போட்டியாளர்னு மதிப்பேன். அவர் நல்ல மனிதர். அவர்கூட வேலை செய்திருக்கேன். போட்டி இருந்தால்தான் நல்ல மியூஸிக் பிறக்கும். யுவனோடு பழக்கம் கிடையாது. எனக்கு அவரைத் தெரியாது. பார்த்தால் 'ஹலோ’ சொல்லிக்குவோம். அவ்வளவுதான்!''

''மற்ற இளம் இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லுங்க?''

''நான் யாரையும் கேட்கிறதில்லையே! திமிராச் சொல்லலை. யாரோட பாதிப்பும் இல்லாம நம்ம இசை இருக்கணுமேனு வேண்டி விரும்பித்தான் கேட்கிறதில்லை. தியேட்டர்ல படம் பார்க்கும்போது ஒரே ஒரு தடவை கேட்கிறதோடு சரி. தவிச்சுக்கிட்டு இருந்த இமானுக்கு 'மைனா’ நல்ல பிரேக். போன்ல, 'பின்னிட்டீங்க இமான்’னு சொன்னேன். 'கண்கள் இரண்டால்’ கேட்டதும் ஜேம்ஸ் வசந்தனுக்குத் தொலை பேசினேன்!''

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

''உங்களை அறிமுகப்படுத்திய வசந்தபாலன், பிறகு செல்வராகவன்... இவங்ககூடல்லாம் பிரிவு... ஏன்?''

காதலைச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்...

''எனக்கு இப்பவும் செல்வா நல்ல ஃப்ரெண்ட். எங்களுக்குள் மனஸ்தாபம் கிடையாது. எனக்கான பட்ஜெட் 'மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் இல்லை. கேஷ் ஃப்ளோவும் சரியில்லை. அதனால் உட்கார்ந்து பேசி விலகிட்டோம். இப்பவும் செல்வா போன் பண்ணி, 'ஜி.வி ஒரு பிரச்னை’ன்னு சொன்னா, நான்தான் முன்னாடி போய் நிப்பேன். என்னை நம்பி 'ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி ஒரு புராஜெக்ட் அவர் கொடுத்தார். நான் அதில் ப்ரூவ் பண்ணினது வேற விஷயம். நம்பிக்கையா கொடுத்தது பெரிய விஷயம் இல்லையா? வசந்தபாலனைப் பொறுத்தவரை எனக்கு 'வெயில்’ வெளிச்சம் கொடுத்தது அவர்தான். எத்தனையோ பேர் 'ஜி.வி வேண்டாம்’னு அவர்கிட்ட சொன்னபோதும், எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த நன்றியை மறக்கவும் கூடாது. மறக்கவும் முடியாது. ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு, எங்க இரண்டு பேருக்கும் மனநிலை வேறுவேறாக இருந்தது. 'வெயிலில்’ நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். ஏன்னா, நான் ப்ரூவ் பண்ணி ஆகணும். ப்ரூவ் பண்ணாதபோது நான் பேசக் கூடாது. ஒரு பாயின்ட்டுக்குப் பிறகு அவர் டைரக்ஷன் பத்தியே பேசுவார். எனக்குன்னு மியூஸிக்கில் சில விஷயங்கள் இருக்கு. 'வெயிலு’க்குப் பிறகு எனக்கும் அவருக்கும் செட் ஆகலை. ஆகவே, பிரிஞ்சுட்டோம். திரும்பவும் நாங்க இரண்டு பேரும் சேரவே முடியாது. அந்த மாதிரி பிரிஞ்சுட்டோம். எனக்கு முதல் படம் கொடுத்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்!''

படங்கள் : கே.ராஜசேகரன்