
``எங்க ஏரியால யார் செத்துப்போனாலும் எங்க தலைவர் உடனே போய் விசாரிப்பாரு.”
``நிஜமாவா?”
“ஆமா... அப்பத்தானே நாளைக்கு அவரு பேர்ல கள்ள ஓட்டு போடமுடியும்!”
- வி.சாரதி டேச்சு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``சார் என் மொபைலைக் காணோம்.”
``எங்கய்யா வெச்சிருந்த?’’
``காணாமல்போன என் மனைவி கைல இருந்த ஹேண்ட் பேக்ல!”
- அ.ரியாஸ்

"சில முக்கிய அலுவல்களால் இன்றைய கூட்டத்துக்கு வருகை தர இயலாமல்போன..."
"தலைவர் யாரைச் சொல்றார்?"
"கூட்டத்தைத்தான்!"
- அஜித்

"தலைவர் மைக் டெஸ்ட் செய்வதோடு நிறுத்தி விடுவார், பேச மாட்டார் என்று உறுதி அளிக்கிறோம். எனவே கூட்டத்தினர் கலைந்து செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்!"
- அஜித்