
நீ... நான்... காதல்...
நம்மை
மோந்து பார்த்துவிட்டுப் போகிறது
தெரு நாய் ..!
- சுவாமிநாதன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதன் முதலா லவ் பண்றவனும்...
முதன் முதலா ஜிம்முக்குப் போறவனும்...
அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக்கிட்டே இருப்பான்!
- கிங்மேக்கர்

அழுத குழந்தைக்கு ஆண்ட்ராய்டு
தெலுங்கு நாட்டாமை பெத்தராயுடு!
- பாண்டா

வாரக்கடைசி,
லிவிங் ரூமில்
மையமாகக் கிடந்த
சோபாவில் அமர்ந்தனர்
ஹவுஸ்மேட்ஸ் !
- ரியாஸ்

‘தானாடவில்லைம்மா சதையாடுது’ என பாடிக்கொண்டிருந்தார்,
கசாப்புக் கடைக்காரர்!
- சாமிநாதன்

‘அவளைக் கல்யாணம் பண்ண முடியலியே’ன்னு சிலர்!
‘இவளைக் கல்யாணம் பண்ணிட்டோமே’ன்னு சிலர்!
‘எவளையுமே கல்யாணம் பண்ண முடியலையே’ன்னு பலர்!
- மகிழினி மணி.எம்

எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ சென்னை - சேலம்
எட்டு வழிச் சாலையைச்
சொல்லலை, புரிஞ்சுக்கோ!
- விக்னேஷ்

பூரா சொத்துகளையும்
எழுதிவெச்ச ரஜினியையே
நிலத்துக்காகப்
போராட வெச்சதே சாதனைதான்!
- அம்பிகா

மழையில
கரைஞ்சுபோச்சு
காதலியின் முத்தம்..!
- வெ.சென்னப்பன்
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!