
“நேத்து ரீலிஸ் ஆன உங்க படத்தைப் பார்த்தேன் முதல் படத்துல நல்லா நடிச்சிருக்கீங்க!”
“இது என்னோட 75வது படம்.”
“தெரியும். நீங்க நடிச்ச முதல் படம்னு சொன்னேன்.”
- வி.சாரதி டேச்சு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"என் உயிரிலும் மேலான தொண்டர்களே... நான் என்ன பேசுவேன் என்று உங்களுக்குத் தெரியும் ..நீங்கள் என்ன வீசுவீர்கள் என்று எனக்குத் தெரியும்..!"
- சி.சாமிநாதன்,

“நாலு தலைமுறையா உங்க குடும்பத்துக்கு எங்க குடும்பம்தான் டாக்டரா இருக்கு!”
“என் பேரனையாவது விட்டுருங்க டாக்டர்!”
- எஸ்.பி.வளர்மதி

“அந்த டாக்டரோட நிலைமை இப்ப பாவம் ரொம்ப மோசமா இருக்கு.”
“ஏன்?”
“இப்ப அவரு எல்லா வீட்டுக்கும் போன் பண்ணி எப்ப வந்தா பேஷன்டைப் பார்க்கலாம்னு கேட்கிறாரு.”
- வி.சாரதி டேச்சு