பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

"ஊர்வலத்துக்கு ஏன் போலீஸ் அனுமதி தரலை?"

"நடுரோட்டுல ரெண்டு பேர் நடந்து போறதுக்கெல்லாம் அனுமதி கொடுக்க  முடியாதுன்னுட்டாங்க தலைவரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 2

“அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

‘`இங்கு அக்குபஞ்சர் சிகிச்சை பார்க்கப்படும். பஞ்சர் டயர் ஒன்றுக்கு 50 ரூபாய்’னு எழுதிப் போட்டிருக்காரே!”

 - எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 2

“உனக்குத்தான் கை கால் நல்லா இருக்கே. நீ உழைச்சு சாப்பிடக்கூடாதா?”

“உங்ககிட்டகூடதான் பணம் நிறைய இருக்கு. நீங்க தான தர்மம் பண்ணக்கூடாதா?”

- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ் - 2

"பிரதமரே கைப்பட உனக்கு நன்றிக் கடிதம் எழுதினாரா, எதுக்கு?"

"அவர் கால் படாத ஒரு நாட்டைக் கண்டுபிடிச்சு சொன்னேன்!"

- அஜித்