சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

"தலைவருக்கு, பேச்சுவார்த்தைல எப்படி பல் உடைஞ்சது..?"

"வீட்ல சம்சாரத்துகூட பேசியிருக்காரு!"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 1

"அந்த டாக்டர் என்ன இப்படி இருக்காரு?"

"எப்படி?"

"ஆபரேஷனைப் பாதில நிறுத்திட்டுவந்து, `உங்க மாமாவோட ஆபரேஷன் கொஞ்சம் சிக்கலாப் போயிடிச்சு, 20ஆயிரம் வரைக்கும் கூடுதலா ஆகும். என்ன சொல்றீங்க?’னு கேக்கறாரே!"

- வி.ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 1

"கான்ஸ்டபிளா இருந்தவனை நான்தான் இன்ஸ்பெக்டர் ஆக்கினேன்."

"படிக்க வெச்சா தலைவரே?"

"என்னைப் புடிக்க வெச்சு!"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 1

``மன்னர் இவ்வளவு அப்பாவியா?’’

``என்னாச்சு?”

`` `பக்கத்தில் பதுங்குகுழி உள்ளது. எதிரிகள் மாற்றுப்பாதையில் செல்லவும்’னு போர்டு வெச்சிருக்காரு!”

- அம்பை தேவா