சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

"அடுத்தபடியாக, பிரிந்து சென்றவர்களுக்கான நலத்திட்டங்களையும்... பிரிய நினைப்பவர்களின் சொத்துப்பட்டியலை அமலாக்கத்துறைக்குத் தகவல் கொடுக்கும் நிகழ்ச்சியையும்  தலைவர் அவர்கள் தொடங்கி வைப்பார்!"

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 3

"அந்த டாக்டர் ஒரு வாஸ்து நிபுணர்னு எப்படிச் சொல்றே?"

"ஈசானி மூலையில இதயம் இருக்கக்கூடாது. அதை மாத்தி வைக்கணும்னு சொல்றாரு"

 ​- மாணிக்கம்

ஜோக்ஸ் - 3

"தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தலைவர், தன் மேல்  முதல் செருப்பு வந்து விழுந்தவுடன், தனது பேச்சை நிறுத்திக்கொள்வாரென்பதை..!"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 3

" நம்ம தெருவோட மானத்தைக் காப்பாத்த 4 முட்டை, அரை லிட்டர் பால் போடுங்க தாயீ..."

" என்னப்பா புதுசா மானம் மரியாதையினு புது லிஸ்ட் போடுற?”

" பக்கத்துத் தெரு பிச்சைக்காரனோட ஃபிட்னஸ் சவாலை ஏத்திருக்கேம்மா’'

- பழ.அசோக்குமார்