
“ஆபரேஷனுக்கு மொத்தம் எவ்வளவு டாக்டர் ஆகும்?”
“மொத்தமும் ஆகும்”
- வி.சாரதி டேச்சு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"தலைவர் கதை கேட்கிறாரே, படத்தை விநியோகிக்கப்போறாரா..?"
"நீங்க வேற... படத்தை எதிர்க்கிறதுக்கு ஏதாவது கிடைக்குமான்னு தேடறாரு..."
- அதிரை யூசுப்

"அதென்ன டிஜிட்டல் சாமியார்?"
"அவரோட ஆசீர்வாதத்தை அமேசான், ஃபிளிப்கார்ட்ல மட்டும்தான் வாங்க முடியுமாம்!"
- அஜித்

"என்ன இருந்தாலும் வீடு பூந்து அடிச்சுப் புடுங்கினது தப்பு..."
"ஸ்டேஷனுக்கு வர வெச்சு அடிச்சுப் புடுங்க, நானென்ன உங்கள மாதிரி பதவியிலயா இருக்கேன் ஏட்டய்யா..!"
- சி.சாமிநாதன்