
வெத்தல வெத்தல
பாக்கு வெத்தலையாம்...
தமிழ் சினிமாவுல டைரக்டர்ஸுக்கு
கதை பத்தலையாம்!
- நிலாரோஜா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘தோண்டி’ டன் கணக்கில் பேசுவார் மூலவர்.
‘ஓங்கி’ டன் கணக்கில் அடிப்பார் மூத்தவர்.
‘தோ கிலோ மீட்டர்’ என மைல் கணக்கில் நடப்பார் கடைக்குட்டி!
- பாண்டா

புரிஞ்சவன் பிஸ்தா
புரியாதவன் பாதாம்
புரியாதமாதிரி நடிப்பவன்
வெள்ளரி விதை!
- தமிழ்

கண்ணை மூடினால்
கனவிலும் -
ஆதார்தானே!
- ஏந்தல் இளங்கோ

புளியமரத்தின் கீழ்
யூரின் பாஸ் செய்தவன் தலையில்
காகம் ஒன்று
‘பொத்’தென
எச்சமிட்டது.
- மீனா எஸ். குமார்

சிக்கலாய்
இருந்தாலும்
விரும்பி ஏற்கின்றனர்
மக்கள்
இடியாப்பத்தை!
- உதயகுமார்

ஆப் கி பார்
விஜய் கி சர்கார்
அச்சாதின் ஆயா ஹே!
- சித்தார்த்

தாவரவியல் பாடமெடுத்த
ஆசிரியை பெயர் மலர்.
கணித வகுப்பெடுத்த
ஆசிரியரின் பெயர் சீனிவாச ராமானுஜன்.
ஆனால்,
இங்கிலீஷ் வாத்தியாரின் பெயரோ தமிழ்ச் செல்வன்!
- ஏஞ்சலீன்

உன் `ம்’ என்ற சொல்லில்
உள்ளதடி
என் உலக`ம்’...
கல்யாணம்ம்ம்...
வைபோகம்ம்ம்...
திருமணம்ம்ம்...
- அம்பிகா
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!