பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

"என்ன... ஃபீஸ் தராம கிளம்பறீங்க?"

 "நீங்க எந்த வியாதியையும் கண்டுபிடிக்கலியே.. உடம்பு நல்லாதான் இருக்குனு சொல்லிட்டீங்களே..."

 - அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 1

"பூமிக்கு வரும் விண்கற்களை நாங்கள் போடும் 10 வழிச் சாலை வழியாக விரைவாகக் கடலுக்குக் கொண்டு சென்றுவிடலாம் என்பதை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்..!"

 - மாணிக்கம்

ஜோக்ஸ் - 1

“நம்ம தலைவர் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது உளறிடுறார்”

 “ஏன், என்னாச்சு?”

 "சென்னையிலிருந்து சேலத்துக்கு விரைவாக விமானத்தில் போக, ஆகாயத்தில் எட்டு வழிப் பாதை போடுவோம்னு சொல்லியிருக்கார்!”

 - ஹெச் .உமர் பாரூக்

ஜோக்ஸ் - 1

"மேடையில ரெண்டு பேருக்கு மேல உக்கார விடாதீங்கனு சொன்னா கேக்கறீங்களா?"

 "அதனால இப்ப என்ன?"

 "ஆட்கள் அதிகமா இருக்குறதுனால தலைவர் மேடையை நோக்கித் திரும்பி நின்னு பேச  ஆரம்பிச்சுட்டார்!"

 - அஜித்