பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

“கல்யாணத் தரகர் என்ன சொல்லிட்டுப் போறார்?”

“கைல ஒரு நல்ல வரன் இருக்கு, சீக்கிரமா பிரேக்கப் பண்ணுனு சொல்றார்.”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

"தங்களின் உருவ பொம்மை மீது அம்பு எய்து பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக எதிரி ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா!"

"பொம்மைகளுக்கு ஓடத்தெரியாது என்று காட்டமாக பதில் ஓலை அனுப்பிவிடுங்கள் அமைச்சரே!"

 - அஜித்

ஜோக்ஸ் - 2

"மணலெனத் திரண்டிருக்கும் மக்களே..!"

"தலைவருக்கு எப்போதுமே தொழில் ஞாபகம்தான்!"

-கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

“அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார்னு மேடையில பேசுற தலைவர் இப்ப கம்போடியாவைப்  பார்னு பேசறாரே?”

“எல்லா நாட்டையும் சுத்திப் பார்த்த தலைவர் கம்போடியாவை சுத்திப் பார்க்கப் போறதை  சிம்பாலிக்கா சொல்றார்!”

 - எஸ்.முகம்மது யூசுப்