சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

“டாக்டர், ஊசி குத்தும்போது வலிக்காதுன்னு சொன்னீங்க?”

“வலிக்காதுன்னு சொன்னது எனக்கு.”

- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ்

“அந்தப் பிச்சைக்காரருக்கு மட்டும் ஏன் சுடச்சுட சாப்பாடு கொடுக்கிற?”

“அவர் வாரத்துக்கு ஒருமுறை தெருவுல நல்லா சமைக்கிறவங்களோட தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுப் பரிசு கொடுப்பார்.”

- மகிழினி மணி.எம்சத்துவாச்சாரி

ஜோக்ஸ்

“குடியிருக்கிற வீட்டை அடமானம் வெச்சுதான் கட்சி நடத்துறேன்னு தலைவர் சொன்னதுக்காகவா கூட்டத்துல கலாட்டாவாச்சு?”

“கூட்டத்துல வீட்டு ஓனரும் இருந்திருக்கார்!”

- அஜித்

ஜோக்ஸ்

"இந்த ஏரியாவில் டவர் கிடைக்குமா?"

"வீடுதானே கேட்டிங்க... இப்போ டவரும் கேட்டா எப்படி?"

- கி.ரவிக்குமார்