பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5

 “ஆகாயத்தில் ரொம்ப தூரத்துக்குப் பச்சை  பலூன்களா பறக்க விட்டிருக்காங்களே, எதுக்கு?”

“ஃப்ளைட்ல  வர்ற முதல்வருக்கான  பசுமைப் பாதையாம்!”

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 5

"நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது 100 பேரின் ஆண்ட்ராய்டு போன், 50 நெக்லஸ், 25 சங்கிலி, 30 தோடு, 10 மோதிரம் தொலைந்து போயுள்ளது. இதிலிருந்து தெரியவில்லையா எங்களுக்குக் கூட்டம் வருகிறதென்று..."

- திருமாளம் எஸ்.பழனிவேல் 

ஜோக்ஸ் - 5

“இந்தளவுக்கு  பில் போட்டதைப் பார்த்து என்னால ஜீரணிக்கவே முடியல டாக்டர்”

“அதுக்குத்தான் இந்த மாத்திரை எழுதியிருக்கேன்!”

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 5

“நம்ம தலைவருக்கு அரசியல் ஆசை குறைஞ்சிடுச்சோ?”

“எதை வெச்சுச் சொல்றே?”

“ ‘தொகுதி நல்ல தொகைக்கு உள்வாடகைக்கு விடப்படும்’-னு போர்டு போட்டு வெச்சிருக்காரே...!”

 - பழ.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு