பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

"உங்க கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி என்னவெல்லாம் கட்டுதுங்க..?"

"வருமான வரியைத் தவிர மற்றவை எல்லாமே சார்..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 4

``தலைவரே உங்களுக்கு சொந்தமான பத்து இடத்துல இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்திருக்கு!’’

``விடு. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!’’ 

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 4

"காலேஜ்ல படகு பீஸ்னு கேட்டாங்களா எதுக்கு..?"

"பருவ மழை தொடங்கிருச்சின்னா.. காலேஜுக்குள்ளே தண்ணீர் வந்திடுமாம்..!"

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 4

"சாமியார்கள் ஓம்சாந்தி... ஓம்சாந்தின்னுதானே சொல்லுவாங்க..?

இவர் என்ன `ஆம் சாந்தி... ஆம் சாந்தி' ன்னு சொல்றார்?"

"சாமியார் ஆகிறதுக்கு முந்தி, மனைவிகிட்ட அப்படிச் சொல்லிச் சொல்லி அதே பழக்கமாயிடுச்சு..!"

 - வி.ரேவதி

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு