பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

"எனது வீரத்தைக் கவிதையாகப் பாட ஏன் தயங்குகிறீர் புலவரே?"

"எனக்குக் கலாய் கவிதை எழுதிப் பழக்கம் இல்லை மன்னா!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

“ஏம்பா, கண்ணை இமை காக்குறது மாதிரி என் பொண்ணைப் பார்த்துக்குவியா..?’

“கவர்னரைத் தாங்குற கவர்ன்மென்ட் மாதிரி வெச்சுப் பார்த்துக்குவேன் சார்.”

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 1

“மன்னா... பக்கத்து நாட்டு அரசன் ஒன்றாம் தேதியும், தூர நாட்டு அரசன் இருபதாம் தேதியும் நம்முடன் போருக்கு வருவதாக ஓலை அனுப்பியிருக்கிறார்கள்..."

" 'ஒரே போர் - ஒரே ஓட்டம்’னு சொல்லி அவங்களை ஒரே தேதில வரச்சொல்லிடுங்க அமைச்சரே..."

- இரா.வசந்தராசன்

ஜோக்ஸ் - 1

"நம்ம ஆட்சியில்தான் ஊழல் அதிகமா இருக்குன்னு மக்கள் பேசிக்கிறாங்களே!"

"பின்னே! 'வரலாற்றைத் தூர் வாரியது ரூ.100 கோடி'னு கணக்கு காட்டினால், சொல்ல மாட்டாங்களா?"

- கி.ரவிக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு