பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

"அதிர்ச்சியான தகவல் எதையும் அவர்கிட்ட சொல்ல வேண்டாம் சிஸ்டர்..!"

"அப்ப,  ஆபரேஷன் சக்சஸ் ஆனதை  சொல்லலாமா, வேண்டாமா டாக்டர்..?"

- வி.ரேவதி

ஜோக்ஸ் - 3

"சக்சஸ் மீட்டோட கடைசிலதான் சொன்னாங்க..."

"என்னது?"

"பட ரிலீஸ் தேதியைத் தள்ளி வெச்சிருக்காங்களாம்"

- அஜித்

ஜோக்ஸ் - 3

“இந்த ஏரியாவுல ஒரு ஊர் இருந்துச்சே, எங்கே அது?”

“பெரிய சாலையா இருக்கு பாருங்க, அதான்.”

- பொ.பாலாஜிகணேஷ் 

ஜோக்ஸ் - 3

"கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே  தலைவர் அடுத்த கட்சிகிட்டே கூட்டணி பேசப் போனாரே... என்ன டிமாண்ட் வெச்சாராம்?"

"50 ஆயிரம் தொண்டர்கள் வேணுமாம்..."

- பழ.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு