பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

“அந்தப் பல் டாக்டர் போலின்னு எப்படி சொல்றா?”

“ஆடித் தள்ளுபடியில தங்கப் பல் கட்டினா வெள்ளிப் பல் இலவசம்னு போர்டு வெச்சிருக்கார்.”

- எஸ்.கே.சௌந்தரராஜன்

ஜோக்ஸ் - 3

“என்னங்க, வாட்ஸ்-அப்பில் ஐந்து பேருக்கு மேல மெஸேஜை ஷேர் பண்ணக்கூடாதாமே!”

“ஆமாம், அப்படியே ஃப்ரிட்ஜுக்குள்ள அரிசி மாவையும் ஐந்து நாளுக்கு மேல் வைக்கக்கூடாதுன்னு சொன்னா நல்லா இருக்கும்.”

- கமலக்கண்ணன்.இரா

ஜோக்ஸ் - 3

“பேங்க்லகூட பிச்சை எடுக்க வரணுமா?”

“இல்லைங்க. ஆதாரை அக்கவுன்ட்ல இணைக்க வந்திருக்கேன்.”

அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

“அந்தக் கட்சி மேல என்ன வழக்கு..?”
 
“மக்கள்  தொகைக்கு அதிகமா கட்சி  உறுப்பினர்கள் இருக்கிறதா கணக்கு காட்டினாங்களாம்.” 

 - அதிரை யூசுப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு