பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

“தலைவரோட பிறந்த நாள் அன்னிக்கு என்ன சின்ன பசங்க எல்லாரும் தலைவரைத் திட்டுறாங்க?”

அவங்களுக்கு வாழ்த்த வயது இல்லையாம் அதான் .

- தீபிகா சாரதி

ஜோக்ஸ் - 2

“திருவோடுல ஏன் வயர் தொங்குது ?”

“அட்டாச்டு பவர் பேங்க் தாயீ!”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 2

“க்ளைமாக்ஸுல ஹீரோ வில்லனை ஆத்துல தள்ளிடுறாரு...”

“வில்லன் தண்ணியில மூழ்கி செத்துடறானா?”

“மணல் லாரி ஏறி செத்துடறான்!”

- அஜித்

ஜோக்ஸ் - 2

“தலைவர் கடுப்பாகிற அளவுக்கு அப்படி என்னய்யா பட்டிமன்றத்தோட தலைப்பு?”

“நம் கட்சித் தலைமை அதிகம் அஞ்சுவது... வாட்ஸ் அப்புக்கா? லாக்கப்புக்கா..?”

- பழ.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு