சரசர சாரக் காத்தாக மனம் வருடிய இசையமைப்பாளர் ஜிப்ரான், ஈழத்தின் வலிகளைச் சொன்ன 'உச்சிதனை முகர்ந்தால்’ புனிதவதியாகப் பெரும் சோகம் பேசிய சுட்டி நீநிகா, 'ஆடுகளம்’ நண்பனாக, 'மௌன குரு’ மன நோயாளியாக அசத்திய முருக தாஸ், 'கொல வெறி’ அனிருத்... 2011-ல் ஸ்க்ரீன் சென் சேஷன் ஏற்படுத்திய இவர்களைச் சந்திக்கவைத்தோம்...

'' 'ஆடுகளம்’ படத்துல நீங்க வர்றப்போலாம் நான் சிரிச்சுட்டே இருப்பேன். உங்களுக்கு நிஜமாவே இங்கிலீஷ் தெரியாதா?'' என்று முருகதாஸிடம் கேட்டார் அனிருத். ''அட... யாராச்சும் இங்கிலீஷ்ல பேசினாலே காதுல 'கொய்ங்’னு சவுண்டுதான் கேட்கும். அது இப்ப எதுக்கு? உங்க 'கொல வெறி’ உலகப் பிரசித்தம். பின்னிட்டீங்க. வாழ்த்துக்கள்! 'வாகை சூட வா’ ஜிப்ரான்... உங்களைப் பத்திச் சொல்லுங்க!'' என்றார் முருகதாஸ்.

''நான் கோயம்புத்தூர்க்காரன். அப்பா - அம்மாவின் ஆசை நான் மியூஸிக் டைரக்டர் ஆகணும்கிறதுதான். லண்டன் டிரினிட்டி காலேஜ்ல எய்த் கிரேடு பியானோ பாஸ் பண்ணிட்டு, சிங்கப்பூர் லாஷேல்லி காலேஜ்ல மியூஸிக் படிச்சேன். கிட்டத்தட்ட 800 விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் பண்ணேன். சற்குணம் எனக்கு 14 வருஷ நண்பர். ரஹ்மான் சார் கூப்பிட்டு, 'வாகை சூட வா பாடல்கள் ரொம்பப் புதுசா இருக்கு. நல்லா பண்ற!’னு பாராட்டினதை இப்போ நினைச்சாலும் சிலிர்க்குது!'' என்று மகிழ்ச்சி காட்டினார் ஜிப்ரான்.

''சந்தோஷம். நம்மளைப் பத்தி நாலு பிட் போட்டுக் குறேன்!'' என்று ஆரம்பித்தார் முருகதாஸ். ''நான்பாண்டிச் சேரிக்காரன். ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவன். நாடகம்னா பைத்தியம் எனக்கு. வேலு சரவணனும் முருக பூபதியும்தான் என்னைப் பட்டை தீட்டிக் கூத்துப் பட்டறையில் சேர்த்தாங்க. அங்கே என்னைப் பார்த்த தரணி சார், 'கில்லி’ படத்துல விஜய்க்கு நண்பனா 'ஆதிவாசி’ கேரக்டர்ல நடிக்கவெச்சார். அப்புறம் ஒரு டீக்கடையில அறிமுகமான வெற்றிமாறன் 'ஆடுகளம்’ படத்தில் நடிக்கவெச்சார். இப்போ 'மௌன குரு’ பட விகடன் விமர்சனத்துல என் பேர் வர்ற அளவுக்கு வளர்ச்சி. பக்கத்துல பாப்பா இருக்கு... வெட்கமா இருக்கு. ஆனாலும் சொல்றேன். இப்பத்தான் நிறையக் காதல் விண்ணப்பங்கள் வருது. அதெல்லாம் சாதிச்ச அப்புறம் சந்தோஷப்பட்டுக்கலாம்னு

விட்டுட்டேன்!'' என்று முருகதாஸ் வெட்கப்பட்டு நிறுத்த, ஜோராகக் கை தட்டினார் நீநிகா.

''அண்ணே... சீக்கிரமே கல்யாணத்துக்குக் கூப்பிடுங்க. நான் என்னைப் பத்திச் சொல்லட்டுமா. என் ஊரு கோவில்பட்டி. இப்போ சென்னை நங்கநல்லூரில் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். எம்.ஜி.ஆர். நடிச்ச தேவர் ஃபிலிம்ஸ் படங்களுக்கு வசனம் எழுதின அய்யாப்பிள்ளையின் பேத்தி நான். படத்தில் இலங்கைத் தமிழ் பேச சிரமமா இருந் துச்சு. காசி ஆனந்தன் அய்யா சொல்லிக் கொடுத்ததால் சமாளிச்சேன். உலகம் முழுக்க இருந்து தமிழர்கள் எனக்கு போன் பண்ணி வாழ்த்துறாங்க. சிலர் எதுவும் பேசாம அழுதுட்டே இருக்காங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை!''

அது வரை கலகலவெனச் சென்றுகொண்டு இருந்த சந்திப்பு, அங்கே போர்த்திக்கொண்டது கனத்த மௌனத்தை!