சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

"நீங்க ஒரு அரசியல் கட்சிக்குத் தலைவரா இருந்துகிட்டு இப்படி அடிக்கடி ஜெயிலுக்குப் போறீங்களே...இது நல்லாவா இருக்கு..?"

"என்னையச் சுத்தி நாலு பேரு இருக்கிற இடம் அது மட்டுமாதானே இருக்கு..."

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ்

"மன்னா... எதிரி மன்னனுக்கு தினமும் நிறைய மெசேஜ், வீடியோஸ் என்று அனுப்பிக் கொண்டே இருக்கிறீர்களே... என்ன காரணம்...?"

"அவனுக்கு போரடித்தால் போருக்கு வந்து விடுவான் அமைச்சரே..."

- கலைவாணன்

ஜோக்ஸ்

“க.க சேலஞ்சுல நம்ம தலைவரோட யாரும் போட்டி போட முடியாதா... அதென்ன க.க?!"

"கட்சி விட்டுக் கட்சி தாவறதுதான்...!"

- கோவை.நா.கி.பிரசாத்

ஜோக்ஸ்

“தொழில் போட்டியை எப்படி சமாளிக்கிறே?”

“திருட்டு போனதைப் பற்றி போலீஸிடம் சொல்லவில்லை என்றால் திருடியதில் 20 சதவிகிதம் திருப்பிக் கொடுக்கப்படும்னு அறிவிச்சிருக்கேன்.”

- மகிழினி மணி.எம்