'வேட்டை டீம் ரெடி!’ - இயக்குநர் லிங்குசாமி தட்டிய மெசேஜ் இது. வால் பிடித்துப் போய் நின்றால்... மாதவன், ஆர்யா, சமீரா, அமலா பால் என கலர்ஃபுல் கச்சேரி.

''அமல்... இந்த மீட்டிங் முடியறதுக்குள்ளே அது எத்தனை தடவைனு கரெக்டா சொல்லணும்... சரியா?'' என்று அமலா பாலுக்குக் கீ கொடுத்துவிட்டு ஆர்யா பக்கம் திரும்பினார் மாதவன்.

''டேய் தம்பிப் பையா... இப்போ நீ என் உடன்பிறவாச் சகோதரனா ஆயிட்டடா... ஷூட்டிங் முடிஞ்சதுல இருந்து ஐ மிஸ் யூடா!'' என்று மாதவன் நெகிழ, அதற்கு ஆர்யா மகிழ...

''ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கப்பா பாச மலர் பிரதர்ஸ்!'' என்று சவுண்டு கமென்ட் கொடுத்தார் அமலா.

''ஷூட்டிங் ஸ்பாட்ல கேமராவுக்கு வெளியிலும் இவங்க ரெண்டு பேரும் போட்ட டிராமாவுக்கு அளவே இல்லை. 'நீ சாப்பிட்டியா... நான் ஊட்டி விடவா’னு கொஞ்சிக்கிறதும்... ஒரே ரூமை ஷேர் பண்ணிக்கிறதும்... ஒண்ணா ஸ்விம்மிங் போறதும்னு... படத்துல இவங்களுக்குத்தான் செம கெமிஸ்ட்ரி இருக்கும்!'' என்று கிண்டல் கிண்டினார் அமல்.

''ஏய்... உன்கிட்ட நான் அது எத்தனை தடவைனு கணக்குக் கேட்டா... நீ எங்களையே கலாய்க்கிறியா?'' - மாதவனின் இந்தக் கணக்குப் புதிர் புரியாமல் ஆர்யா முழிக்க, சமீரா முகத்தில் புன்னகை வெள்ளம்.

''என்னப்பா ஏதோ கணக்கு வழக்குனு கலாய்க்கிறீங்க... என்னை வெச்சு காமெடி எதுவும் பண்றீங்களா?'' என்று ஆர்யா சதாய்க்க, ''கூல்... கூல்...'' என்று அவரைச் சமாதானப்படுத்திய சமீரா, ''நான் அந்த ரகசியம் சொல்றேன்!'' என்று சஸ்பென்ஸ் உடைத்தார்.

''ஆர்யாவுக்கும் அமலாவுக்கும் கிஸ்ஸிங் சீன். மொத்தப் படத்திலும் ஆர்யா டேக் மேல டேக் வாங்கினது அப்போதான். டைரக்டர் ஓ.கே. சொன்னாலும் 'இல்லை... அந்த ஃபீல் வரலை... ஒன் மோர் போலாம்... ஒன் மோர் பண்ணலாம்’னு சொல்லிச் சொல்லி ரிப்பீட் கேட்டுட்டே இருந்தார் ஆர்யா. இந்த அமலா பாவம்... க்யூட் கேர்ள். ஆனா, வெரி பிட்டி கேர்ள். இதை ஏன் இத்தனை டேக் எடுக்கிறாங்கனு கொஞ்சம்கூட யோசிக்காம லிப் லைனர் போட்டுட்டு பெர்ஃபார்ம் பண்ணிட்டே இருந்தது!'' என்று சிரிப்பு மத்தாப்புகளுக்கு இடையில் சமீரா சொல்லி முடிக்க, ஆர்யா முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி.

அதுவரை அமைதியாக இவர்களின் சேட்டைகளை ரசித்துக்கொண்டு இருந்த லிங்குசாமி, ஆர்யாவுக்கு ஆதரவாகத் தோள் தட்டி ஆரம்பித்தார்.

''ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே நான் ஆர்யாகிட்ட தெளிவா சொல்லிட்டேன். சீன்ல நீ நடிச்சது திருப்தி இல்லைன்னா சொல்லு, எத்தனை தடவை யும் ரீ-டேக் போகலாம்னு சொன்னேன். ஏற்கெனவே ஆக்ஷன் படங்களில் நடிச்சதால், அந்த சீன்களை எல்லாம் அடிச்சுத் தூள் பண்ணிட்டார் பையன். ஆனா, முத்தம் பத்தி எதுவுமே தெரியாதாம்.

அதான் அந்தக் காட்சிகளில் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டார்!'' என்று லிங்கு குறும்பாகச் சிரிக்க... ''ஏய்ய்... இதெல்லாம் டூ மச்!'' என்று ஆர்யா மீது வேட்டை வெறியோடு பாய்ந்தார்கள் மூவரும்!