
"போதிய அவகாசம் தராமல் ஆறு மாதத்திற்கு ஒரு ரெய்டு வந்தால் நாங்கள் எப்படித்தான் அரசியல் நடத்துவது?!"
- கோவை.நா.கி.பிரசாத்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"எதிரி நாட்டு மன்னர் தந்திரமாக நம் மன்னரைக் கைது செய்துவிட்டாரா, எப்படி?"
"போர் முனையிலிருந்து மன்னர் ஓடிவரும் வழியில் அரண்மனை செட்டிங்கைப் போட்டுப் பிடித்துள்ளார்!"
- ஏந்தல் இளங்கோ

``அந்த டாஸ்மாக்லே என்ன கலாட்டா?’’
``பாட்டில் கொண்டு வந்திருக்கேன், 5% தள்ளுபடி கொடுங்கன்னு கேக்கறான் சார்’’!
- ஹெச்.உமர் பாரூக்

“சித்திரகுப்தா, அங்கே என்ன ஒரே சத்தமாக இருக்கிறது?”
“ஜூனியர்களை சீனியர்கள் ராகிங் செய்கிறார்கள் பிரபு”
- தமிழ் நண்டு
ஓவியங்கள்: கண்ணா