
"பிச்சைக்காரன் தட்டுல 500 ரூவா போட்ட உங்களையே திட்டிட்டுப் போறானே ஏன்?"
"வாங்கின கடனுக்கான வட்டிய கையில கொடுக்காமல் திருவோட்டுல போட்டேனாம்..!"
- வி.ரேவதி, தஞ்சை


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"அந்த நாட்டு வைத்தியர் ஒரு போலின்னு எதை வெச்சுச் சொல்றீங்க?"
" 'இங்கு வங்கி சர்வர் முடக்கத்திற்கு கட்டு போடப்படும்'னு போர்டு வெச்சிருக்காரே..!"
- தொண்டி முத்தூஸ்.

"முன்பு போலீஸால் அதிகம் தேடப்பட்டு, இப்போது கூகுளிலும் அதிகமாகத் தேடப்பட்டுவரும் தலைவர் அவர்களே...”
- ரஹீம் கஸாலி

"என் மனைவியைக் கடத்திட்டுப் போனவன் என்னை போன்ல மிரட்டறான் சார்..!"
"என்ன சொல்றான்..?"
"மரியாதையா 10 லட்சம் குடு.இல்லேன்னா கொண்டு வந்து விட்ருவேன்'ன்னு சொல்றான் சார்..!"
- பர்வீன் யூனுஸ்.
ஓவியங்கள்: கண்ணா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism