
“தலைவரை ஏன் ஜட்ஜ் மேக்கர்ன்னு சொல்றாங்க?”
“அவர் மேல உள்ள வழக்குகளை விசாரிக்க அரசு நிறைய ஜட்ஜுகளை நியமிக்குதே!”
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“பையன் என்ன பண்றாரு?”
``ஒரு நாளைக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோல் போடுற அளவுக்குக் கை நிறைய சம்பாதிக்கறாரு.”
- ரஹீம் கஸாலி

"எக்ஸ்ரேல உங்க பாதி மண்டைதான் இருக்கு?"
"இன்னொருத்தரும் எக்ஸ்ரே எடுக்க வந்தாரு டாக்டர்... செலவு குறையும்னு ஒன் பை டூ போட்டுட்டோம்!"
- அஜித்

“200 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய்.. குளுகுளு வசதிகள், நவீன அறைகள், உல்லாசக் கேளிக்கைகள், அறுசுவை விருந்துகள்... சென்னையிலிருந்து வெறும் 45 கி.மீ.தொலைவில்...”
“என்னய்யா எதுவும் புது ரிஸார்ட்டா..?”
“இல்லை தலைவரே.. நம்ம புழல் விளம்பரம்தான்...”
- பழ.அசோக்குமார்