சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

"உங்க ஹோட்டல்ல பார்சல் வசதி இருக்காப்பா..?"

 "இருக்கு சார்! என்ன கட்டணும்?’’

"நான் சாப்பிட்ட பில்லுக்கான அரிசி, உளுந்தைக் கட்டிக் குடுப்பா, வீட்ல போய் மாவாட்டி எடுத்திட்டு வந்துடறேன்..!"

 - வி.ரேவதி,தஞ்சை

ஜோக்ஸ் - 2

"குழந்தைக்கு ஒன்றரை வயசா... என்னம்மா பிரச்னை?"

"இன்னும்  அம்மா அம்மான்னே கூப்பிடறான்...மம்மின்னு வாயிலே வரமாட்டேங்குது டாக்டர்."

- விநா

ஜோக்ஸ் - 2

"போருக்குச் செல்லும் என்னை வழியனுப்ப, பள்ளி மாணவர்களை எதற்காக வரச் சொன்னீர்கள் அமைச்சரே?"

"நாளை அரசு விடுமுறை கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் அவர்களாகவே வந்திருக்கிறார்கள் மன்னா!"

- அஜித்

ஜோக்ஸ் - 2

"டைட்டில் கார்டைப் பார்த்து ஏன் எல்லோரும் சிரிக்கறாங்க?"

"படத்தின் தயாரிப்பாளர், ஃபைனான்சியரால் துன்புறுத்தப்படவில்லைன்னு காட்றாங்க... அதான்!"

- பர்வீன் யூனுஸ்