சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

"கைலாயத்தில் என்ன குழப்பம்?"

"விநாயகர் அமைதிப் பேரணிக்கு அனுமதி கேட்டுள்ளாராம்!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

"ஒரு லிட்டர் பெட்ரோல் போடுங்க!"

"பான் கார்டு கொடுங்க!"

- அஜித்

ஜோக்ஸ் - 3

“ஒரு பஸ்ஸில வர்றதுக்கு எதுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கணும்கிறீங்க..?”

“நைட் 12 மணிவரைக்கும் ஒரு டிக்கெட்... அதுக்குமேலே டீசல் விலை உயர்வைத் தெரிஞ்சிகிட்டு அதுக்கேற்ற மாதிரி அப்புறம் ஒரு டிக்கெட்...”

- பழ.அசோக்குமார்

ஜோக்ஸ் - 3

``ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா கூட்டிட்டு  வந்திருந்தா பேஷன்ட்டைக் காப்பாற்றியிருக்கலாம்.’’

``என்ன சொல்றிங்க?’’

``ஆமாம், எங்க டாக்டர் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போயிருப்பாரு.’’

- தீபிகா சாரதி