
"இன்ஸ்பெக்டர் சார்.. நைட் ரவுண்ட்ஸ் வர்ற போலீஸ்கிட்ட நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லி வைக்கக்கூடாதா?"
"என்ன சொல்லணும்..?"
"திருடிக்கிட்டு இருக்கும்போது.. போலீஸ் ஜீப்போட சைரன் சத்தம் கேட்கிறது ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்குங்கய்யா... தொழிலில் சரியாவே கான்சென்ட்ரேட் பண்ணமுடியலை...’’
- பழ.அசோக்குமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"தலைவரே பேச்சை நிறுத்திடுங்க!"
"இருய்யா... நாலு செருப்புதானே வந்திருக்கு. அதுக்குள்ள என்ன?"
"அதுல ரெண்டு, மேடையில இருக்குறவங்க எறிஞ்சது!"
- அஜித்

“தேர்தலில் எங்களைத் தனியாக நிற்கச் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவரை நான் கேட்கிறேன், நாற்பது வேட்பாளர்களுக்கு நாங்கள் எங்கே போவோம்?”
- தீபிகா சாரதி

"ஏன் இந்த ஏரியாவில், வீட்டு வாடகை இவ்வளவு அதிகமா இருக்கு!"
"ஆறு மாதத்துக்கு ஒரு முறை இடைத்தேர்தல் அறிவிச்சுக்கிட்டே இருப்பாங்க!"
- கி.ரவிக்குமார்