
"எங்கள் கட்சிக்காரர்கள் ஆற்றில் மணல் அள்ளுவது அந்த மணலைக் கொண்டு ஊழலுக்கு சமாதி கட்ட வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில்தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..."
- ப்ரணா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“உங்க வீட்டுக்காரர் துபாய்ல வேலை செய்றார்னு சொன்னியே. வர்றப்ப என்ன வாங்கிட்டு வந்தாரு..?”
“10 லிட்டர் பெட்ரோல்..!”
- சி.சாமிநாதன்

“தொழில் போட்டியை எப்படி சமாளிக்குற?”
“அடுத்தமுறை நான் திருட வசதியா ஒரு வீடு பார்த்துக் கொடுத்தால், உங்களிடம் திருடியதில் 50% திருப்பித் தரப்படும்னு அறிவிச்சிருக்கேன்.”
- மகிழினி மணி.எம்

“ஹிப்னாடிசம்னா என்ன டாக்டர்?”
“ஒருத்தரைத் தன் வசப்படுத்தி, தான் நினைச்சதை எல்லாம் அவரை வெச்சே செய்ய வைக்கிறது’’
“உளராதீங்க டாக்டர்! அதுக்குப் பேரு ஹிப்னாடிசம் இல்ல, கல்யாணம்.”
- மகிழினி மணி.எம்