
“மன்னா! நம் எதிரியின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது...”
“என்ன சொல்கிறீர் அமைச்சரே...?”
“கப்பம் கட்டச் சொல்லி இறுதியாக ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ மூலம் தூது அனுப்பியிருக்கிறான்...”
- யுவகிருஷ்ணா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"எதுக்கு அந்த பஸ் டிரைவரை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணுனாங்க?"
" டாஸ்மாக்ல பஸ்ஸை நிறுத்திவிட்டு `வண்டி பத்து நிமிஷம் நிக்கும். சரக்கு அடிக்கறவங்க அடிச்சுட்டு சீக்கிரமா வாங்க'ன்னு சொல்லியிருக்கார்."
- க.சரவணகுமார்

"மாசா மாசம் ஏழெட்டுப் பேர்களுக்கு திவசம் கொண்டாடறாங்களா உங்க மனைவி..?!"
"ஆமாம்... டி.வி.மெகா சீரியல்கள்லே இறந்துபோறவங்களுக்குத்தான்!"
- விநா

“தலைவர் கட்சி ஆபீஸ்லதான் இருக்கார்னு எப்படிச் சொல்ற?”
“Feeling lonely-னு ஸ்டேட்டஸ் போடுறாரே!”
- அம்பை தேவா