பாம்பே டான் பாட்ஷா பாய், `எட்டு எட்டா மனுஷன் வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ’ எனும் கோட்பாட்டை ராமையாவுக்கும் அல்போன்ஸாவுக்கும் இன்னபிற குரூப் டான்ஸர்களுக்கும் வரையறுத்துக் கொடுத்தார். அதே கோட்பாட்டின் சூத்திரத்தை தீபாவாளிக்குள் புகுத்திக் கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கிப் பார்க்கையில் இஸ் ஈக்வல் டூவாய்க் கிடைத்தது இதுதான்.

முதல் எட்டில் ருசிக்காதது பலகாரமல்ல :

பட்டாசின் திரியைக் கிள்ள கைகள் பரபரக்கும் பருவம். ஆனால், கைகளுக்கு பட்டாசுக்குப் பதில் பலகாரங்கள்தான் வந்துசேரும். போனால் போகட்டுமென ஒரு பாக்கெட் பொட்டுவெடி வாங்கித் தருவார்கள். அதைத் துப்பாக்கியில் சுருட்டி வைக்கப்போய், ஒன்று விரல்களில் ரத்தக்காவு வாங்கும் அல்லது துப்பாக்கியே துண்டு துண்டாய்ப் போகும். அதோடு துப்பாக்கி சுடுதல் செஷனைக் கமுக்கமாக முடித்துவிட்டு, கம்மென வீட்டுக்குள் படுத்துத் தூங்கிவிடுவோம். அணுகுண்டு அதிர்ந்தாலும் அசராமல் தூங்குபவர்கள், அதிரச அண்டாவின் மூடி திறக்கும் சத்தம் கேட்டே விழித்தெழுவோம். இன்னும் சிலர் வாய்க்குள் முறுக்கு நொறுங்கும் சத்தமெல்லாம் கேட்டுக் கண் விழிப்பார்கள். அண்டாவிலிருக்கும் பலகாரங்களைக் கொஞ்சம் குண்டாவுக்கு மாற்றிக்கொண்டு, டவுசரோடு போய் வாசலில் அமர்ந்தால், அணுகுண்டுகளைக் கொளுத்தும் அர்னால்டுகளையும் சீனிவெடி கொளுத்தும் சில்வெஸ்டர் ஸ்டாலோ‑ன்களையும் பார்த்துச் செமத்தியாகப் பொழுதுபோகும். அரைத்தூக்கத்தில் குளித்த எண்ணெய்க் குளியலும் அரைஞாண் கயிற்றில் தொங்கும் அரைடவுசரும் அன்றைய நினைவிலேயே இருக்காது. ஆனால், சீடைகளின் எண்ணிக்கை நினைவிலிருக்கும். மாவில் சுட்ட பலகாரங்களை, வாயால் அரைத்து மீண்டும் மாவாகவே வயிற்றுக்குள் வரையறை தாண்டித் தள்ளியதில், மறுநாள் என்பது வயிற்றுவலியோடு விடியும். இப்படித்தான் முதல் எட்டில் தீபாவளி முடியும்!

இரண்டாம் எட்டில் உடுத்தாதது உடையுமல்ல :

டவுசரிலிருந்து பேன்ட்டுக்கு மாறும் பருவம். பேரல், பூட் கட், கார்கோஸ், பென்சில் ஃபிட், ஜாக்கர் என அந்தந்தக் காலத்திற்கேற்ற ஃபேஷன் மனதை ஆட்டிப்படைக்கும். ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதுபோய், தீபாவளிக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே கண்களுக்கு ஆடை மட்டும்தான் தெரிய ஆரம்பிக்கும். இந்தக் கலர் பேன்ட், இந்தக் கலர் சட்டையென மனதுக்குள்ளேயே துணியை அயர்ன் செய்து மடித்து வைத்துவிடுவோம். ஆனால், பெற்றோர்களோ, கடந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துபோன ஓர் ஆடையை நம்மிடம் நீட்டுவார்கள் அல்லது டெய்லர் கடைக்கு பொடனியிலேயே அடித்துக் கூட்டிப்போய், மூன்று தீபாவளிக்கு அடுத்து இருக்கப்போகும் சைஸிற்கு இப்போதே அட்வான்ஸாக அளவு கொடுத்துத் தைக்கச் சொல்வார்கள்.

`சரி, ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைனா, கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு ஏத்துக்கணும்’ என மனதை இரும்பாக்கிக்கொண்டு, டிரஸ் வேகமாகத் தைத்துவர டெய்லரின் பார்வையில் படுவதுபோன்றே குறுக்குமறுக்காக அலைவோம். அப்போது `தம்பி, இங்கே வாயேன்’ என டெய்லர்கள் அன்பாக அழைக்க, ஆர்வமாகப் போனால், `அண்ணனுக்கு டீ வாங்கிட்டு வர்றியா?’ எனத் தூக்குவாளியை நீட்டுவார்கள். பேன்ட்டுக்காகக் கொடுத்த வேலையெல்லாம் செய்துமுடித்தும், தீபாவளி அன்று காலை ஐந்து மணிக்குத்தான் நம் சட்டைக்கு பட்டன் வைக்க உட்காருவார் அந்த டெய்லர். நரகாசூரா! கண்கள் எரிய சீயக்காய் பொடி தேய்த்துக்கொண்டு, 80 டிகிரிக்குக் கொதிக்கும் நீரில் பிராய்லர் கோழியைப்போல் குளித்துவிட்டு, ஆர்வம் பொங்க பேன்ட் சட்டையை எடுத்து மாட்டினால், அனிருத்துக்கு அண்டர்டேக்கரின் டிரெஸ்ஸை மாட்டிவிட்டதுபோல் படு காமெடியாக இருக்கும். அதைக் கண்ணாடியில் பார்க்கையில் கலங்கிப்போகும் கண்களைத் துடைத்துக்கொண்டு தீபாவளி கொண்டாடக் கிளம்பினால், ஊதுவத்திக்கே அந்தச் சட்டையைப் பிடிக்காது; ஓட்டை போட்டுவிடும். பிறகு, `புது டிரஸ்ஸை இப்படி நல்லநாள் அதுவுமா நாசம் பண்ணிட்டியே’ என அடி, உதை, மிதியோடு இன்பமாக முடியும் அந்தத் தீபாவளி!

மூன்றாம் எட்டில் செல்லாதது சினிமாவுமல்ல :

இவ்வளவு நாளாகப் பலகாரங்களை அமுக்கி வயிற்றுவலி வந்ததும்போதும், சட்டைக்காக வீட்டில் அடி வாங்கியதும்போதும் என மனது சபதமெடுக்கும் பருவம். முதல் நாள் இரவென்பது கோலங்களை ரசிப்பதிலும் சோமபானத்தை ருசிப்பதிலும் கழிந்துவிடும். மறுநாள் காலையோ மங்கல இசையோடு விடியும். மங்கல இசையிலிருந்து பட்டிமன்றத்தின் தலைப்பு சொல்லும் வரை பார்த்துவிட்டு, பாத்ரூமுக்குள் சென்றுவிடுவோம். மூன்றுவேளை பல்லு வெளக்கி, ஆறுமுறை முகம் கழுவிட்டு வெளியே வந்தால் `இரண்டு அணிக்கும் சாதகமான ஒரு தீர்ப்பைச் சொல்லிக்கொண்டிருப்பார் பட்டிமன்ற நடுவர். அதே எனர்ஜியோடு புது டிரெஸ்ஸை மாட்டிக்கொண்டு ஏரியாவுக்குள் ஒரு ரவுண்டடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் அடைந்துவிடுபவர்கள் ஒரு ரகம். அப்படியே, நண்பர்களுடன் சேர்ந்து கையில் வைத்து அணுகுண்டை வெடிப்பதும், காதில் செருகி ராக்கெட் விடுவதுமாக தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் இன்னொரு ரகம். மங்கல இசை போடுவதற்கு முன்பாகவே தியேட்டர் கவுன்டரில் கத்திக்கொண்டிருப்பவர்கள் மூன்றாவது ரகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரகம்.

பட்டிமன்றத்தைக்கூட பல்லையும் பல்லுக்கு இடையில் பலகாரத்தையும் கடித்துக்கொண்டு பார்த்துவிடுவது, ஊரிலிருக்கும் குப்பையெல்லாம் சேர்த்துக் கொளுத்திவிடுவது மற்றும் விதவித டெக்னிக்குகளைப் பயன்படுத்தி பட்டாசு கொளுத்துவதெல்லாம் இந்த எட்டின் ஆரம்பக் காலகட்டத்தில்தான் நடக்கும்.

நான்காம் எட்டில் தூங்காதது தூக்கமுமல்ல :

தீபாவளி என்றால் என்னவென்றே மறந்துபோகும் பருவம். முதல்நாள் இரவென்பது ரத்தப்பொரியல், குடல் வறுவல், சுக்கா வறுவல் என ரணகளமாக முடிந்து, மறுநாள் காலை பத்து மணிக்கு விடியும். விடிந்தவுடன் தலைவலி கட்டிங்கைக் காலியாக்கிவிட்டு பின்னர் குளியல். குளியலை முடித்த பின்னர் சூடாகச் சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, மறுபடியும் சிறகடிக்கத் தொடங்குவார்கள். சிறகடிப்பதும் தூங்குவதும் மாறி மாறி நடந்து மாலையில் கண் விழிப்பார்கள். சரக்கடித்தால் ஒன்று கையேந்தி பவனில் ஆப்பாயில் சாப்பிட வேண்டும் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் கடையில் பிரச்னை செய்ய வேண்டும். தீபாவளி அன்று இரண்டுமே முடியாது என்பதால், வீட்டில் ஆப்பாயில் போட்டுத் தரச் சொல்லி, `என்ன ஆப்பாயில் பாதிதான் வெந்திருக்கு’ எனப் பிரச்னை செய்வார்கள். இப்படியாக முடியும் நான்காம் எட்டின் தீபாவளி.

இந்த எட்டிலேயே பெரும்பாலானோருக்கு தீபாவளி என்றால் என்னவென்றே மறந்துவிடும். ஆதலால், அடுத்த எட்டுகளில் தீபாவளி என்பது வெறும் விடுமுறைநாள் அவ்வளவே. எட்டு எட்டாய் தீபாவளியைப் பிரிச்சுக்கோங்க, அதில் எந்த எட்டில் நீங்க இருக்கீங்க தெரிஞ்சுக்கோங்க..!

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: ஹாசிப்கான்