சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

“இந்த மழையிலே கூட்டம் நடத்தினா,  மக்கள் எப்படிய்யா வருவாங்க?!’’

ஜோக்ஸ் - 3“புரியாம பேசாதீங்க தலைவரே!  மழை வந்தா,  மக்கள் அதிகமா ஒதுங்கற இடம் இதுதான்!’’

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

“குண்டாஸ்னா  என்ன தலைவரே?”

“எனக்குப் பங்கு தராம நீ மணல் கடத்தினா உம்மேல பாயற சட்டம்யா!”

-  சீர்காழி ஆர்.சீதாராமன்

ஜோக்ஸ் - 3

“டிராபிக் போலீஸ் தலைவர்கிட்ட எதுக்கு கெஞ்சறாரு..?”

“நாலு மணி நேரமா டிராபிக்கை கிளியர் பண்ண முடியல.. அஞ்சு நிமிசம் வந்து பேசி கூட்டத்த கலைச்சி விடச் சொல்றாரு..!”

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 3

``அந்த பாக்கெட் சாஷே தேங்காய் எண்ணெய் நாலு கொடுங்க!’’

``அது பெட்ரோலுங்க!”

- எஸ்.முகம்மது யூசுப்.