"எல்லாச் சாமிகளையும் ஊர் ஊராக கோயில் கோயிலாக அலைந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும்

கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான், எனது கட்சிக்காரர் 500 சிலைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளாரே தவிர... இதனைக் கடத்தல் என்று வழக்கு போட்டிருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்....."
- பழ.அசோக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தலைவர் ஏன் கைரேகை ஜோசியம் மட்டும் பார்க்க வரவே மாட்டேங்கிறாரு..?"

"பல 'சம்பவங்களில்' பொருந்திப்போயிடுமோங்கிற பயம்தானாம்..."
- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை

"போனமுறை இனிமே கோர்ட்டுக்கே வரமாட்டேன்னு வீறாப்பா சொல்லிட்டுப் போனியே..?"
"இது வைல்டு கார்டு என்ட்ரி எசமான்..!"
- பர்வீன் யூனுஸ்

“நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல இருக்கோம் “
“அப்ப உங்களால ஆபீஸ்லகூட நிம்மதியா தூங்க முடியாதுன்னு சொல்லுங்க?”
- தீபிகா சாரதி