பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

"தலைவரோட ஆடியோ லான்ச் எங்கே நடக்குது?"

"வாட்ஸ் அப்-லதான்" 

- எம்.  விக்னேஷ்

ஜோக்ஸ்

“என்னை நம்பி ஊரை விட்டு ஓடிவர என்ன தயக்கம்?”

“என் டாடிக்கு இங்கே நிறைய கடன் இருக்கு. அவரும் கூட ஓடிவரட்டுமான்னு கேட்கிறார்!”

- அம்பை தேவா

ஜோக்ஸ்

“தலைவர் ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்காரு..?”

“அவரோட மருமகனுக்கு வந்த குற்றப்பத்திரிகையில தாய்மாமன் பேர் போடலையாம்!” 

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ்

"எங்க ஆபீஸ்ல, ஒவ்வொருத்தரும் வாங்கற லஞ்சத்துல தினமும் தலா 100 ரூபாய் நிவாரண நிதிக்குக் கொடுத்துடுவோம்."

 "என்ன நிவாரணம்...?"

"லஞ்ச ஒழிப்புல யாராவது மாட்டிக்கிட்டா, அவங்க குடும்பத்துக்கு மாதச் சம்பளம் மாதிரி நிவாரணம் வழங்குவோம்!"

- வி.ரேவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு