
News
ஓவியங்கள்: கண்ணா

“இது வாட்ஸ் அப் வெடி. உண்மையான தமிழர்கள் கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்!”
- மகிழினி மணி.எம்
சத்துவாச்சாரி

“மன்னா! ராணி எதிரிநாட்டு மன்னரிடமிருந்து தப்பிவிட்டார்.”
“அப்போ நாம் உடனடியாக எதிரிநாட்டு மன்னரிடம் சரணடைந்துவிடுவோம். அதுதான் நமக்குப் பாதுகாப்பான இடம்.”
- மகிழினி மணி. எம்

"பணம் இன்னிக்கி வரும்... நாளைக்குப் போயிரும்..."
"ஏன் டாக்டர் அப்படிச் சொல்றீங்க..?"
"நீங்கதான் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகறேன்னு சொல்றீங்களே..!"
- சி.சாமிநாதன்

“தலைவரே நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ்ல ஃபெயில் ஆயிட்டீங்க!"
"என்னய்யா சொல்றே?"
"தீர்ப்பு உங்களுக்கு எதிரா வந்தாலும் ஜெயில்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க!"
- அஜித்