
``தலைவரை ஏன் கைதுபண்றாங்க?’’
``எல்லோரும் உண்மையான சாமி சிலையைத் திருடிட்டு, போலி சிலையை வெச்சாங்க. தலைவர் உண்மையான சிலையைத் திருடிட்டு, தன்னையே சாமி சிலை மாதிரி செய்யச் சொல்லி வெச்சிருக்காரு!’’
- மகிழினி மணி.எம்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இன்டர்வியூல என்ன கேட்டாங்க?’’
`` `வேலையும் பார்த்துக்கிட்டு, மேனேஜரோட ஃபேஸ்புக்ல அப்பப்ப லைக்ஸும் போட முடியுமா?’ன்னு கேட்டாங்க!’’
- அம்பை தேவா

``உன்னைத்தானே ஊரை விட்டு ஓடிவரச் சொன்னேன். உங்க அக்காவை எதுக்குக் கூட்டிட்டு வந்தே?’’
``அக்காவுக்குத்தான் நீங்க மெசேஜ் அனுப்பியிருக்கீங்க. அவ எனக்கு ஃபார்வர்ட் பண்ணினா!’’
- சி.சாமிநாதன்

``எதுக்காக இந்தத் தெருவை விவசாய நிலம்னு சொல்றீங்க?``
``அப்பத்தானே வந்து தார்ரோடு போடுவாங்க!’’
- அஜித்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism