
``தலைவர் சிலைக்கே எல்லாப் பணத்தையும் செலவு செய்துவிட்ட காரணத்தால், உங்கள் அக்கவுன்டில் பணம் போட முடியவில்லை என்பதை...“
- நிரவி கஜேந்திரன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இது உன்னோட கதைங்கிறதுக்கு என்ன ஆதாரம்?``
`` `மை'க்குப் பதிலா என் ரத்தம் ஊற்றி எழுதியிருக்கேன்... வேணும்னா டெஸ்ட் பண்ணிப்பாருங்க ஐயா!``
- அதிரை யூசுப்

``எங்கள் தலைவன் கொடுத்த இலவசப் பொருள்களைப் போட்டு உடைக்கிறீர்களே... அவர் இலவச திருமணம்கூட நடத்திவைத்தார் என்பதை இந்த நேரத்தில்...``
- கமலக்கண்ணன்.இரா

``நம்ம தலைவரோட அரசியல் வாழ்க்கையில இது ரெண்டாவது இன்னிங்ஸ்னு எப்படிச் சொல்றே?''
``ரெய்டுல சம்பாதிச்ச சொத்தெல்லாம் போயிடுச்சே!``
- மாணிக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism