பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

"படம் ரீலிஸ் ஆனதும் எதிர்ப்பு வந்த காட்சிகளை எல்லாம்தான் நீக்கிட்டீங்களே... அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?"

"படத்துல டைட்டில் காட்சிகள் மட்டும்தான் மிச்சமிருக்கு!"

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 4

"அந்த புரொடியூசர் வியாபார நுணுக்கம் தெரிந்தவரா?"

"விரைவில் வெளியாக இருக்கும் எங்கள் படத்தை எதிர்த்து வழக்கு தொடரவும், போராட்டம் செய்யவும் ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்காரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 4

"இந்தக் கல்யாணத்துல புதுமையா டிஜிட்டல் பந்தியாமே?"

"மொய் எழுதுனதும் உங்க மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவாங்க. அந்த நம்பரைச் சொன்னாதான் சாப்பாடாம்!"

- அஜித்

ஜோக்ஸ் - 4

"புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் எங்கள் தலைவரை எட்டுவழிச்சாலை, ஏழு பேர் விடுதலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்னை என்று எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவிக்கும்படி பழைய கட்சிகள் ராக்கிங் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!"

- அஜித் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு