பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

“தலைவர் சிலையில் கண்கள்ல இருந்து கண்ணீர் வர்றமாதிரி இருக்கே!”

“ஆமாம்... மணலைப் பார்க்க முடியாதமாதிரி ஆறு பக்கமா பார்த்து சிலை வச்சுட்டாங்களாம்.’’

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 3

``உயர்கல்வி ஊழல்ல தலைவரை விடுவிச்சிட்டாங்களாம்!”

“எந்த அடிப்படையில?”

“உயர்கல்விக்கும் அவருக்கும் தொடர்பே இல்லைனுதான்!”

_ வி.ரேவதி, தஞ்சை

ஜோக்ஸ் - 3

“எங்களை அடக்க நினைத்தால், ஒடுக்க நினைத்தால், வளைக்க நினைத்தால்...’’

“என்ன செய்வீங்க?”

“அடங்கிவிடுவோம், ஒடுங்கிவிடுவோம், வளைந்துவிடுவோம் என்பதை பணிவன்புடன் ஆளும் தரப்புக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்”

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 3

“தேசியக்கட்சின்னு சொல்லிக்கிறீங்க... உங்க கட்சியோட கொள்கை என்ன தலைவா?”

“எந்த மாநிலத்துக்குன்னு தெளிவா   கேளுங்க”

- வி.ரேவதி, தஞ்சை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு