
News
ஓவியங்கள்: கண்ணா

"புலவரைத் திட்ட தமிழிலேயே மோசமான சில சொற்களை சொல்லும் அமைச்சரே!"
"ஒரு நிமிடம் மன்னா... எதிரி தங்களுக்கு எழுதிய ஓலைகளை எடுத்துவருகிறேன்!"
- அஜித்

“வெற்றிடம்னு சொல்றாங்களே அப்படின்னா என்னய்யா?”
“நீங்க மேடையில் பேசும்போது மைதானத்தில இருக்குதே... அதான் தலைவரே!”
- எஸ். முகம்மது யூசுப்.

"டாக்டர்... பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லையே?"
"ஒண்ணே ஒண்ணு இருக்கு. டிஸ்சார்ஜ் பண்ணும்போது பில்லைப் பார்த்து பயந்துடாதீங்க."
- க.சரவணகுமார்

"தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவிக்காகக் காத்திருக்கும் எங்கள் தலைவரின் வெள்ளி விழா கனவைப் பொன்விழா வரை நீடிக்க வாழ்த்து சொன்ன எதிர்க்கட்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.."
- திருமாளம் எஸ். பழனிவேல்