Published:Updated:

உள்ளாடைகளுக்கு மரியாதை!

ஆர்.சரண்

##~##

'காதலுடன் கூடிய ஆன்மிக ஆக்ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன் காவியம்... 'ரெண்டாவது படம்’. போஸ்டரிலேயே அடாவடி அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டார் 'தமிழ்ப் படம்’ சி.எஸ்.அமுதன்! தனது இரண்டாவது படமான 'ரெண்டாவது படம்’ குறித்துச் சில உள்குத்து உண்மைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...  

 ''டைட்டிலே டரியலா இருக்கே..?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தலைப்புக்கு யோசிக்க நேரம் இல்லை. ரெண்டாவது படம்தான் பண்றோம். அதையே பேரா வெச்சிருவோம்னு வெச்சிட்டேன்! நாலு பேரு சிரிக்கிறாங்கன்னா, எதுவுமே தப்பு இல்லை. ஆனா, 'தமிழ்ப் படம்’ பார்த்த எஃபெக்ட்ல தியேட்டருக்கு வந்தா ஏமாந்துபோவீங்க. ரெண்டாவது படத்தை வேற கோணத்துல பார்ப்பீங்க சார்!''

''போஸ்டர், ஸ்டில்னு எந்தக் கோணத்துல பார்த்தாலும் டெரரா இருக்கே. டிசைன்ல கொடியில

உள்ளாடைகளுக்கு மரியாதை!

காயுற ஜட்டி, பனியன்லாம் தெரியுது. இந்த உலகத் துக்கு என்ன மெசேஜ் சொல்ல வர்றீங்க?''

''ஓ... போஸ்டர் டிசைன்பத்திக் கேட்கிறீங்களா? அது அப்படித்தான்! பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துச் சொம்புக்குக் கொடுத்த மரியாதையை நம்ம மானத்தைக் காப்பாத்துற உள்ளாடைகளுக்கு இதுநாள் வரை தமிழ் சினிமா கொடுத்தது இல்லை. அதான் என்னால முடிஞ்ச மரியாதை செய்யலாம்னு மெனக்கெட்டு இருக்கேன். அது போக, படத்துல நீங்க எதிர்பார்க்காத  ஒரு விஷயமும் இருக்கு. ஆமா, ஒரு கதையும் இருக்கு!''

''ஹை... நல்ல கதையா இருக்கே?''

உள்ளாடைகளுக்கு மரியாதை!

''அட ஆமாங்க... நம்புங்க! நல்ல கதைஅம்சம் உள்ள, சிட்டி ரொமான்டிக் - காமெடி த்ரில்லர் கலந்த கிராமத்துக் காவியம் சார் இது. படத்துல புலி மாதிரி நடிச்சிருக்கார் விமல். அவரைத் தவிர இந்த கேரக்டரை யாருமே பண்ணி இருக்க முடியாதுனு சொல்ற அளவுக்குப் பின்னிப் பெடலெடுத்து இருக்கார். இந்தப் படத்துக் குப் பிறகு 'நடிப்புப் புலி’னு நிச்சயம் அவர் பேருக்கு முன்னாடி பட்டம் போடுவாங்க! ரிச்சர்டை 'நடிப்புக் கரடி’னு சொல்லலாம். அவன் என் பள்ளிக்கூட தோஸ்த். ரொம்பத் திறமைசாலி. நல்ல பிரேக்குக்காகக் காத்துக் கிட்டு இருக்கான். இந்தப் படம் அவனுக்கு பிரேக் மட்டும் இல்லாம... ஹேண்டில் பார், மட்கார்டுலாம் கொடுக்கும்!''

''படத்தோட டீஸருக்கு யூ டியூப்ல கெட்ட கெட்ட கமென்ட்ஸ்லாம் வந்ததே?''

''ஆமா! படிச்சேன். அது திட்டு. வேற டிபார்ட்மென்ட். நிறைய பேரு பாராட்டி இருக்காங்க. அதைக் கவனிச்சீங்களா? ஆனா, சினிமாவுக்குள்ள இருந்துக்கிட்டே சினிமாவைக் கிண்டல் பண்றது தப்பு. நான் தமிழ்ப் படத்துல காமெடிதான் பண்ணி இருந்தேன். உண்மையைச் சொல்ல ணும்னா, 'ஆரண்ய காண்டம்’ மாதிரி ஒரு படம் பண்ணணும்னுதான் ஆசை!''

உள்ளாடைகளுக்கு மரியாதை!

''ரெண்டாவது படத்துக்கு அப்புறம் மூணாவது படமா... இல்லை தெலுங்குப் படமா?''

''சூப்பர் படம்!''