
"என் மனைவிக்குக் கோபம் வந்தா அவ அம்மா வீட்டுக்குப் போயிடுவா!"
"நீங்க என்ன பண்ணுவீங்க?"
"கோபம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிகிட்டே இருப்பேன்!"
- அஜித்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"கட்சித் தலைமையில கொடுத்த புதுவருட காலண்டரைப் பார்த்த தலைவர் டென்ஷனாயிட்டாரா, ஏன்...?"
"சிபிஐ சோதனையைச் சந்தித்த நாள், சுவர் ஏறிக்குதித்துத் தப்பிய தினம்னு அவரைக் கடுப்பேத்தற மாதிரி போட்டிருக்காங்களாம்..."
- வி.வெங்கட்ராமன்

"நாயகன், நாயகிக்குப் பிடிச்சிருக்கும் பேயை ஓட்டுறான். இதுதான் கதை சார்!"
"இதெல்லாம் பழசு. புதுசா டிஜிடல்ல ஏதாவது சொல்லுங்க!"
"நாயகன், நாயகியின் நெகட்டிவ் எனர்ஜியை டிஸ்சார்ஜ் பண்றான்!"
- கி.ரவிக்குமார்

"புதுப் படம் பார்த்தேன்!
நாலே பேர்தான் இருந்தோம்!"
"தியேட்டர்லயா?"
"இல்லை, வீட்ல!"
- கி.ரவிக்குமார்