
"காம்போதி ராகம் கேள்விப்பட்டிருக்கேன், அதென்ன காம்போபேக் ராகம்?!"
"ஒரே பாட்டுல எல்லா ராகமும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கறதுதான்!"
- எஸ். கோபாலன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"தலைவர் இந்த முறையும் ஜெயிக்கணும்னு ரொம்ப பிரயத்தனப்படறாரே ஏன்..?"
"அவர் பார்க்காத நாடுகள் சில பாக்கி இருக்காம்..!"
- வி.ரேவதி, தஞ்சை

"இன்னுமிருக்கும் ஒரிரு சினிமா பிரபலங்களின் திருமணத்தையும் முடித்தபிறகு தலைவர் அவர்கள் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவார் என...."
- வி.வெங்கட்ராமன்

"ரெய்டு நடக்கிறதும் ஒரு வகையில நல்லதுன்னு நம்ம தலைவர் சொல்றாரே?"
"தொழில் போட்டியாளர்களைத் தெரிஞ்சிக்கலாமாம்!"
- மாணிக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism