பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

"சாப்பிட வந்தவர், உங்க ஓட்டல் சாப்பாடு என் மனைவி சமைச்ச மாதிரியே இருக்கு...சமைச்சவரைப் பார்க்கணும்னு சொல்லி, மாஸ்டரோட அஞ்சு விரல்லயும்..."

"மோதிரம் போட்டாரா?"

"சூடு போட்டாரு!"

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 1

"இந்த வழக்கிலிருந்து உங்களை எதுக்கு விடுவிக்கணும்?"

"நான் அரசுக்கு ஆதரவா பேச  ஆரம்பிச்சுட்டேன் மை லார்ட்!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"பொண்ணை எப்ப பார்க்கலாம்?!"

"ஆன் லைன்லே உங்க விண்ணப்பத்தைப் பதிவு பண்ணினா, உங்க மெயில் ஐடிக்கு கால் லெட்டர் வரும்!"

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 1

"அந்த நடிகர் வீட்டுக் கதவில், டிசம்பர் 15 - 30, ஜனவரி 10 - 15, பிப்ரவரி 25 - 28 னு எழுதியிருக்கே, என்ன அது?"

"அந்த நாள்களில் எல்லாம், அவர் அரசியலில் இருப்பாராம்!"

- கி.ரவிக்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு