
``என் மனைவிக்கு பட்டுப்புடவைகள் வாட்ஸ் அப் மாதிரி...’’
``எப்படி...?’’
``கட்டின புடவையைத் துவைத்து பீரோல வைக்கும் போது `லாஸ்ட் ஸீன்'னு டேட் போட்ட ஸ்டிக்கரை ஒட்டிடுவா...’’
- அதிரை யூசுப்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``கடன் கேட்டு எதுக்கு வாட்ஸ் அப்ல மெஸேஜ் அனுப்புறே?’’
``உங்களால முடியலேன்னாலும் நாலு பேருக்கு ஃபார்வர்டு பண்ணுவீங்கன்னுதான்!’’
- அஜித்

``50 வயசுக்கு மேல நீங்க களி சாப்பிடணும்னு டாக்டர் சொல்றாரு தலைவரே...’’
``ஐம்பது வயசு வரைக்கும் அதைத்தான்யா சாப்பிட்டேன்..!’’
- சி.சாமிநாதன்


``அடுத்தவாரம்தானே போர், மன்னர் ஏன் இப்பவே புறமுதுகிட்டு ஓடி வருகிறார்?’’
``இது சோதனை ஓட்டமாம்!’’
- கு.வைரச்சந்திரன்