
“பெண் வீட்டார்கள் செம ட்ரெண்டியான ஆட்கள்தான்!”
“எப்படிச் சொல்ற?”
“வாட்ஸப்ல மாப்பிள்ளை போட்டோ அனுப்சோம். பிடிச்சதுன்னு ரிப்ளை அனுப்பி, ஸ்விக்கில ஸ்வீட் ஆர்டர் பண்ணி அனுப்பியிருக்காங்க!”
-புவனை குணா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``ஒரே வருஷத்துல சுவிஸ் வங்கில போடக்கூடிய அளவு அவர்கிட்ட எப்படி பணம் சேர்ந்தது?”
“அந்தப் பெரிய ஹாஸ்பிடல்ல இட்லி கேன்டீன் வெச்சிருக்காராம்!”
-எம்.மிக்கேல்ராஜ்

``அட... தலைவர் சிலை அச்சு அசல் அவரைப் போலவே இருக்கே!”
“யோவ்... அது சிலை இல்லை, தலைவரேதான். சிலை ரெடியாக ஒரு மணிநேரமாகும்னு கொஞ்ச நேரம் அவரை நிக்க வெச்சிருக்காங்க!”
-எம். மிக்கேல்ராஜ்

``நம்ம தலைவர் இதுவரைக்கும் 258 விழாவுல ரிப்பன் வெட்டியிருக்காரு!”
“எப்படி இவ்ளோ சரியா சொல்ற?”
“அவர் பீரோவுல இருக்கிற கத்திரிக்கோலை எண்ணினேன்!”
- மு.பழனி