Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3
ஜோக்ஸ் - 3

“கூட்டணிக்கு யாருமே வரலைன்னதும் ரொம்ப  அப்செட் ஆன தலைவர் அதிரடியா ஒரு முடிவெடுத்திருக்கார்!”

“என்னென்னு...?”

“கட்சியை ரெண்டா உடைச்சு, கூட்டணி   உருவாக்கிக்கப் போறாராம்.”

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 3

“தலைவர் பெயர் வைத்து முடித்ததும், குழந்தைகளின் உடைமைகளை பெற்றோர் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்!”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 3

“இங்க தலைவர் உண்ணாவிரதம் இருக்கற இடத்தை எப்படிக் கண்டுபிடிக்கறது?”

“அங்கே ஸ்விகி ஆட்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்!”

- இரா.இரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

“குற்றப்பத்திரிகையோட கடைசி வரியில ஃபுல் ஸ்டாப்பே வைக்கலியே?”

“நீங்க நிறுத்துனாதானே வைக்கறதுக்கு தலைவரே!”

- அஜித்