
``தலைவரோட பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல மாலை வாங்காமலேயே போயிட்டேன்!’’
``என்ன சொன்னாரு?’’
``மாலை வாங்கிட்டு வான்னு காசு கொடுத்தாரு!’’
- அஜித்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``படத்தோட கதாசிரியர் யாரு?’’
``கோர்ட்ல விசாரிச்சா சொல்லுவாங்க!’’
- அம்பை தேவா

``மாப்பிள்ளை குடிகாரர்போல?’’

``எப்படிச் சொல்ற?’’
``எல்லோரும் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா'ன்னு கேட்பாங்க. ஆனா இவரு `சைடிஷ் செய்யத் தெரியுமா'ன்னு கேட்கிறார்!’’
- மகிழினி மணி.எம்

`மாண்புமிகு முதல்வர் அவர்களே... எதிர்கால முதல்வராம் முதல்வரின் புதல்வர் அவர்களே... முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராம் அவர்களின் இல்லத்தரசிகளே..!’’
- வி.ரேவதி, தஞ்சை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism